கருணை அடிப்படையில் பணி நியமனம் குறித்த சில கேள்விகள் மற்றும் அதற்குரிய விளக்கங்கள்.!!!

கருணை அடிப்படையில் பணி நியமனம் குறித்த சில கேள்விகள் மற்றும் அதற்குரிய விளக்கங்கள்!!

Tamil Nadu Elementary, Higher Secondary, School Education Subordinate Service – Amendment to the Special...

Tamil Nadu Elementary, Higher Secondary, School Education Subordinate Service - Amendment to the Special Rules Published!-PDF FILE

PTA -விதி முறைகள்.!!!

PTA -விதி முறைகள்

பென்சன் மற்றும் கமூடேஷன் பற்றி தெரிந்து கொள்வோம்.!!!

இன்று கிடைத்த ஒரு தகவல் -பென்சன் மற்றும் கமூடேஷன் பற்றியது.         30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும்.    உதாரணமாக 30ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100= 22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும். இவரே 24 ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100= 18100பென்ஷனாகக் கிடைக்கும். (அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம். முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு.      30ஆண்டுகளுக்கு  மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூபாய் ஹெல்த் அலவன்ஸூம் சேர்ந்து பென்ஷனாகக்கிடைக்கும் என்று முந்தைய பதிவில் பார்த்தோம்     அதாவது(30ஆண்டுகள் பணி முடித்து ஓய்வு பெற்றவர்) பணியிலிருக்கும்போது 40000ரூபாய் பேசிக் வாங்கியிருந்தார் என்றால் ஓய்வு பெற்றபின் அவருடைய பேசிக் 20000ரூபாயாக ஆகிவிடும்.இப்போது இவர் கமுட்டேஷன் வேண்டும் எனறு விரும்புகிறார் எனில் இவருக்கு எவ்வளவு தொகை கமுட்டேஷனாகக் கிடைக்கும் என்று பார்ப்போம்.     பேசிக்கில் மூன்றில் ஒரு பகுதியை கணக்கிட்டு அதை 120ஆல் பெருக்கி வரும் தொகையே கமுடேஷன் ஆகும்.பிடித்தம் செய்யும்போது 180 மாதங்களுக்குப் பிடிப்பார்கள்.  ஓய்வு பெற்றபின் இவருடைய பேசிக் 20000ரூபாய்.இதில் மூன்றில் ஒருபாகம் =20000÷3=6666.66 , இதை 6667 என்று எடுத்துக்கொன்டு 120ஆல் பெருக்க 6667×120=800040(எட்டு லட்சத்து நாற்பது)ரூபாய் கமுட்டேஷன் கிடைக்கும். பென்ஷன் தொகையில் ஒவ்வொரு மாதமும் ரூ.6667பிடித்தம் செய்வார்கள்.இந்த பிடித்தம் 180 மாதங்களுக்குத் தொடரும். (அதாவது6667ஐ 120ஆல் பெருக்கிக் கொடுத்துவிட்டுஇதே 6667ஐ 180 மாதங்களுக்குப் பிடிப்பார்கள்.   அப்ப வட்டி என்பது6667×60=400020 ரூபாய் ஆகும்.பதினைந்து ஆண்டுகள் என்று பார்க்கும்போது இது குறைந்த வட்டிதான்). இடையில் இவர் இறந்துவிட்டால் இந்தப் பிடித்தம் தள்ளுபடி செய்யப்பட்டுவிடும்.இவர் மனைவிக்குக் கொடுக்கப்படும் பென்ஷனில் பிடித்தம் செய்யப்ப்பட மாட்டாது.    (பென்ஷன் வாங்குபவர் இறந்துதுவிட்டால் அவர் வாங்கிய பென்ஷனில் பாதி அவர் மனைவிக்குப் பென்ஷனாகக் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க.)  30 ஆண்டு முடித்த 40000ரூபாய் பேசிக்கும் 5000ரூபாய் DAவும் பெற்ற ஒருவர் கமுடேஷன் வேண்டாம் எனும்போது அவருக்கு22600ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும் என்று பார்த்தோம்.இவரே கமுட்டேஷனை விரும்புகிறார் என்றால் இவருக்கு 6667ஐக் கழிக்க 22600-6667=15933 ரூபாய் பென்ஷன் கிடைக்கும்.    இவரே 24 வருடம் சர்வீஸ் செய்திருந்தால் இவருடைய கமுட்டேஷனைப் பார்ப்போம்.     ஓய்வு பெற்றபின் இவருடைய பேசிக் 40000÷2×24÷30=16000 ஆகும்.இதில் மூன்றிலொரு பாகம் 16000÷3=5333.33.இதை 5333என எடுத்துக்கொண்டு அதை120 ஆல் பெருக்க 5333×120=63996 0ரூபாய் கமுட்டேஷனாகக் கிடைக்கும்.கமுட்டேஷன் வாங்கியபின் இவருடைய பென்ஷன் 18100-5333=12767கிடைக்கும்.(18100 எப்படி வந்ததென்பது தெரியும். தெரியவில்லையெனில் முந்தைய கமெண்ட்டில் பார்க்கவும்)     நண்பர்களே மேற்கண்ட விவரங்களை வைத்து அவரவர் சர்வீஸ் செய்த ஆண்டுகள் மற்றும் அவரவர் பெற்ற பேசிக்கிற்குத் தகுந்தாற்போல் பென்ஷன் மற்றும் கமுடேஷனைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.     பணியில் உள்ளவர்களுக்குத் தற்போது 12%DA வழங்கப்படுகிறது. இது எதிர்காலத்தில் கூடிக்கொண்டே வரும்.    40000க்கு 5000 DA என்றால் 12.5%DA வரும். இந்தளவுக்குத் தற்போது இல்லையென்றாலும் எதிர்காலத்தில் இதையும் தாண்டும்.ஆகவே இதை ஒரு உதாரணமாகக் கணக்கில் கொள்ளவும். நன்றி   P.செல்வமணி்.

Latest Student – Teacher Ratio Table for Primary & Upper Primary Schools.!!!

Latest Student - Teacher Ratio Table for Primary & Upper Primary Schools

அடிப்படை விதிகள் அறிவோம் : SPF- சிறப்பு நல நிதி ரூ 70/- பிடித்தம் எத்தனை தவணைகள் பிடித்தம்...

SPF- சிறப்பு நல நிதி ரூ 70/- 2004-ல் அதற்கு பின் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு SPF- சிறப்பு நல நிதி ரூ 70/- பிடித்தம் எத்தனை தவணைகள் பிடித்தம் செய்யப்பட வேண்டும்?...

அரசு ஊழியர் யார்? தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள் – ஓர் பார்வை.!!!

அரசு ஊழியர் யார்? தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள்,1973 பிரிவு.2(3)-ன் படி, ஒரு அரசு ஊழியர்கள் என்பவர் அரசு தன் ஆட்சியின் காரியங்களை ஆற்ற பணி அல்லது பதவிக்கு அமர்த்தும் நபர் என...

அடிப்படை விதிகள் அறிவோம் – CPS MISSING CREDIT- விளக்கம்.!!!

missing credit என்று குறிப்பிட்டுள்ளவை missing credit தான். CPS சிலருக்கு ஆண்டு பல மாதங்கள் தொடர்ந்து வரவில்லை எனில் அவை அடுத்த ஆண்டுகளின் கணக்குத்தாள்களில் வந்துள்ளதா என பார்த்து, அவ்வாறு குறிப்பிட்ட மாத சந்தா...

அடிப்படை விதிகள் அறிவோம் – ந.க.எண். / ஓ.மு.எண். / மூ.மு.எண். / நி.மு.எண். / ப.மு.எண். /...

அரசு ஊழியர்களின் கடித எண்கள் விளக்கம் அரசூழியர்களைப் பொறுத்தவரை, மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஊழியர்களென இரண்டு வகையினர் இருக்கிறார்கள். ஆகையால், இவ்விரண்டு வகையினருக்கும் கடிதவெண்கள் மாறுபடும். நம்மைப் பொறுத்தவரை மாநில அரசு ஊழியர்களின்...

Earned Leave – ஈட்டிய விடுப்பு பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம்.!!!

தகுதிகாண் பருவத்தில் உள்ளவர்கள் EL எடுத்தால் probation period தள்ளிப்போகும். * பணியில் சேர்ந்து ஒரு வருடம் முடிந்ததும் ஈட்டிய விடுப்பினை ஒப்படைத்து பணமாகப் பெறலாம். ஆண், பெண் இருவரும். * தகுதிகாண் பருவம் முடிக்கும் முன்பு (பணியில் சேர்ந்து 2 வருடங்களுக்குள்) மகப்பேறு விடுப்பு எடுத்தால் அந்த வருடத்திற்கான EL -ஐ ஒப்படைக்க முடியாது. EL நாட்கள் மகப்பேறு விடுப்புடன் சேர்த்துக்கொள்ளப்படும் (உதாரணமாக - அவரது கணக்கில் 10 நாட்கள் EL உள்ளது என்றால் மகப்பேறு விடுப்பில் அந்த 10 நாட்களை கழித்துவிட்டு (180-10= 170) மீதம் உள்ள 170 நாட்கள் மட்டுமே வழங்கப்படும். எனவே மகப்பேறு விடுப்பு எடுக்கும் முன்பே கணக்கில் உள்ள EL-ஐ எடுத்துவிடுவது பயனளிக்கும்) * வருடத்திற்கு 17 நாட்கள் EL. அதில் 15 நாட்களை ஒப்படைத்து பணமாகப் பெறலாம் . *மீதமுள்ள 2 நாட்கள் சேர்ந்துகொண்டே வரும் அதை ஓய்வுபெறும் பொழுது ஒப்படைத்து பணமாகப் பெறலாம். * 21 நாட்கள் ML எடுத்தால் ஒரு நாள் EL கழிக்கப்படும். * வருடத்திற்கு மொத்தம் 365 நாட்கள்.இதை 17ஆல் (EL) வகுத்தால் 365/17=21. * எனவே 21 நாட்கள் ML எடுத்தால் ஒரு நாள் EL என்ற கணக்கில் கழிக்கப்படுகிறது. * மகப்பேறு விடுப்பு எடுத்த வருடத்தில் ஈட்டிய விடுப்பு ஒப்படைக்கும் பொழுது , மகப்பேறு விடுப்பு எடுத்த 6 மாதங்கள் , மற்றும் ML எடுத்த தாட்கள் தவிர்த்து மீதம் வேலை செய்த நாட்களை 21 ஆல் வகுத்து EL கணக்கிடப்படும். CL, RL, தவிர வேலை செய்த நாட்களுக்கு மட்டுமே EL கணக்கிடப்படும். * ஒரு நாள் மட்டும் EL தேவைப்படின் எடுத்துக்கொள்ளலாம். * அரசு ஊழியர்களுக்கு மட்டும் வருடத்திற்கு 30 நாட்கள் EL (ஆசிரியர்களுக்கு 17 நாட்கள் மட்டுமே). அதில் 15 நாட்களை ஒப்படைக்கலாம். மீதம் உள்ள 15 நாட்கள் சேர்ந்துகொண்டே வரும்..அதிகபட்ச மாக 240 நாட்களைச் சேர்த்து வைத்து ஒப்படைக்கலாம். அதற்கு மேல் சேருபவை எந்தவிதத்திலும் பயனில்லை. *மாறுதல் / பதவி உயர்வு / பணியிறக்கம் / நிரவல் போன்ற நிகழ்வுகளின் போது பழைய இடத்திற்கும் புதிய இடத்திற்குமிடையே குறைந்தது 8 கி.மீ (ரேடியஸ்) இருந்தால் அனுபவிக்காத பணியேற்பிடைக்காலம் EL கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும். இதற்கு 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 90 நாட்களுக்குள் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும். (குறைந்தது 5 நாட்கள். 160 கி.மீ க்கு மேற்படின் அட்டவணைப்படி நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்) *ஒருமுறை சரண்டர் செய்த அதே தேதியில் தான் ஆண்டுதோறும் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கணக்கீட்டிற்கு வசதியாக இருக்கவும் Pay Rollல் விவரம் குறிக்க எளிமையாக அமையவும் ஒரே தேதியில் ஆண்டுதோறும் அல்லது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சரண் செய்வது சிறந்தது. எவ்வாறாயினும் ஒரு ஒப்படைப்பு நாளுக்கும் அடுத்த ஒப்படைப்பு நாளுக்குமிடையே 15 நாட்கள் ஒப்படைப்பெனில் ஓராண்டு / 30 நாட்கள் ஒப்படைப்பெனில் இரண்டாண்டு இடைவெளி இருக்க வேண்டும். * ஒப்படைப்பு நாள் தான் முக்கியமே தவிர விண்ணப்பிக்கும் தேதியோ, அலுவலர் சேங்க்ஷன் செய்யும் தேதியோ, ECS ஆகும் தேதியோ அடுத்தமுறை ஒப்படைப்பு செய்யும்போது குறிக்கப்பட வேண்டியதில்லை. * EL ஒப்படைப்பு நாளின் போது குறைந்த அளவு அகவிலைப்படியும் பின்னர் முன்தேதியிட்டு DA உயர்த்தப்படும் போது ஒப்படைப்பு நாளில் அதிக அகவிலைப்படியும் இருந்தால் DA நிலுவையுடன் சரண்டருக்குரிய நிலுவையையும் சேர்த்து சுதந்தரித்துக் கொள்ளலாம். ஊக்க ஊதியம் முன்தேதியிட்டுப் பெற்றாலும் நிலுவைக் கணக்கீட்டுக் காலத்தில் ஒப்படைப்பு தேதி வந்தால் சரண்டர் நிலுவையும் பெறத் தகுதியுண்டு. * பணிநிறைவு / இறப்பின் போது இருப்பிலுள்ள EL நாட்களுக்குரிய (அதிகபட்சம் 240) அப்போதைய சம்பளம் மற்றும் அகவிலைப்படி வீதத்தில் கணக்கிடப்பட்டு திரள்தொகையாக ஒப்பளிக்கப்படும். * அதிகபட்சம் தொடர்ந்து 180 நாட்கள் ஈட்டிய விடுப்பு எடுக்கலாம். அதனைத் தொடர்ந்து மருத்துவ விடுப்பு எடுக்கலாம். 180 நாட்களுக்குமேற்பட்ட விடுப்புக்கு வீட்டுவாடகைப்படி கிடைக்காது

Follow us

0FansLike
0FollowersFollow
1,370SubscribersSubscribe

Latest news

You cannot copy content of this site