You cannot copy content of this site

மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட மறுத்தால் அரசு ஊழியர்களுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை .!!!

மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட மறுத்தால் அரசு ஊழியர்களுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கவும் அபராதம் வசூலிக்கவும் சட்டத்தில் இடமுள்ளது.  மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும்  தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்காக...

உங்கள் ATM கார்டின் 16 இலக்க எண் இருந்தாலே போதும்! உங்கள் பணம் அபேஸ்..!!!

டிஜிட்டல் இந்தியாவின் ஒவ்வொரு ஒவ்வொரு குடிமகனும், பணம் இருக்கிறதோ இல்லையோ கட்டாயம் பேங்க் அக்கௌண்ட் வைத்திருக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டு விட்டோம். இந்தியாவில் இப்போது ஆன்லைன் பரிவர்த்தனை நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வளர்ந்து விட்டது. பெட்டிக்கடைகளில் கூட Paytm மூலம் பணம் செலுத்தும் வசதி வந்துவிட்டது. இந்த அசுர வளர்ச்சி ஒரு பக்கம் நன்மைதான் என்றாலும் அதற்கு இணையாக ஆபத்துகளும் அதிகம் என்பது பலருக்கும் தெரிவதில்லை!நமது பெரும்பாலான பரிவர்த்தனைகளை ATM கார்டுகள் மூலமாகவே செய்கின்றோம்.I   நமது வங்கிகளும் பல்வேறு கட்ட பாதுகாப்பு அம்சங்களை வழங்கி வருகிறது. இப்பொது நாம் ஒரு ATM-ல் பணம் எடுக்கச் சென்று மூன்று முறைகளுக்கு மேல் தவறான எண்ணை அழுத்தினால் நமது ATM கார்டு லாக் செய்யப்படும். பின் வங்கி கிளையை அணுகித்தான் அதை ரிலீஸ் செய்யமுடியும். அதே போல் நாம் ATM கார்டு பயன்படுத்தி ரீசார்ஜ் போன்ற ஆன்லைன் பரிவர்த்தனைகளை செய்யும் போது OTP எனப்படும் ஒருமுறை கடவுச்சொல் நமது செல்போன் எண்ணிற்கு வரும். அதை உள்ளிட்ட பிறகே பரிவர்த்தனை நிறைவு பெறும். அதுமட்டுமில்லாமல் Two Factor Authentication எனப்படும் பாதுகாப்பு அம்சத்தையும் பயன்படுத்தி நாம் நமது பணத்தை பாதுகாத்து கொள்ளலாம்.   OTP உள்ளிட்ட பிறகு தான் பரிவர்த்தனை நிறைவு பெறும் என்ற நிலை மாறி ரொம்பகாலம் ஆகிவிட்டது. உங்களது ATM கார்டின் 16 இலக்க எண் மற்றும் பின்பக்கம் இருக்கும் CVV என்ற மூன்றிலக்க எண் இவை தெரிந்தாலே போதும் எங்கிருந்து வேண்டுமானாலும் உங்கள் பணத்தை, உங்கள் அனுமதி இல்லாமலே எடுத்துவிட முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா .!? எப்படி இந்த அநியாயம் நடக்கிறது என்று பார்ப்போம்.     வெளிநாட்டில் உள்ள நிறுவனங்கள் அல்லது ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு RBI-ன் விதிமுறைகள் செல்லுபடியாகாது. எனவே உங்கள் ATM கார்டை பயன்படுத்தி வெளிநாட்டு பரிவர்த்தனை செய்யும் போது உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP வராது. OTP இல்லாமலேயே பரிவர்த்தனை முடிந்துவிடும்.   screen capture of HDFC Bank Account உங்கள் கணக்கிலிருந்து வெளிநாட்டு வங்கி கணக்கிற்கு பணத்தை மாற்றினால் OTP வராமலேயே பரிவர்த்தனை பக்குவமாக நடந்துமுடிந்து விடும். உங்கள் பணத்தை திருடும் ஹேக்கர்கள் Dark web மூலம் இந்த பரிவர்த்தனையை செய்வதால் எந்த வங்கி கணக்கிற்கு பணம் போகிறது என்ற தகவல் கூட தெரியாது. இன்னும் சில நேரங்களில் நம் எண்ணிற்கு பணம் எடுத்தால் வருகிற மெசேஜ் கூட வராமல் தடுத்து அக்கௌன்ட்டில் உள்ள பணம் அனைத்தையும் சுருட்டிவிடுவார்கள்.   இதை தடுப்பதற்கும் வழி உள்ளது. இப்போது எல்லா வங்கிகளும் தங்களுக்கென தனி App வைத்திருக்கின்றனர். அதை பயன்படுத்தி உங்கள் அக்கவுண்ட்டின் International Transactions என்பதை off செய்துவிட்டால் உங்கள் வங்கி கணக்கிலிருந்து வெளிநாட்டு பரிவர்த்தனைகள் செய்யமுடியாது. App-ல் இந்த வசதி இல்லாவிட்டால் customer care அதிகாரிகளுக்கு போன் செய்தோஅல்லது வங்கி கிளையை அணுகியோ International Transactions-யை off செய்து கொள்ளலாம்.  1 இப்போதே மேலே சொன்ன வழிமுறையை பின்பற்றி உங்கள் பணத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

ஒரேநாளில் விடுப்பு எடுக்கும் 5 லட்சம் ஆசிரியர்கள்.!!!

பள்ளிகளின் ஆசிரியர்கள் 5 லட்சம் பேர் வருகிற ஜனவரி 21ம் தேதி பொது விடுப்பு எடுக்க உள்ளனர். உத்தரப்பிரதேச அரசு ஆசிரியர்கள் சங்கம் தங்கள் உறுப்பினர்களுக்கு சிறந்த உள்கட்டமைப்பு, ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகளை வலியுறுத்தி...

ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்த வங்கி முறையின் புதிய மாற்றங்கள்.!!!

2020-ம் ஆண்டு, ஜனவரி 1-ம் தேதி முதல் வங்கி முறையில் பல்வேறு மாற்றங்களும் புதிய விதிமுறைகளும் நடைமுறைக்கு வந்துள்ளன.   டெபிட் மற்றும் ஏடிஎம் கார்டு   அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் டெபிட் கார்டுகளை வழங்கியுள்ளன. ஆனால்,...

ரயில் கட்டணம் உயர்வு – சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு எவ்வளவு உயர்வு ?

நீண்ட இடைவேளைக்கு பின் ரயில் கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது இந்திய அரசு ! சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு எவ்வளவு உயர்வு என்பதை விளக்கும் அட்டவணை கீழே

WhatsApp – ல் அடுத்து வர இருக்கும் புதிய அதிரடி அப்டேட்.!!!

வாட்ஸ்அப் செயலியில் குறுந்தகவல்கள் தானாக மறைந்து போக செய்யும் அம்சம் சோதனை செய்யப்படுகிறது. இந்த அம்சம் குறிப்பிட்ட நேரத்திற்கு பின் குறுந்தகவல்களை தானாக அழித்துவிடும். வாட்ஸ்அப் பீட்டா பதிப்புகளில் இந்த அம்சம் வெவ்வேறு பெயர்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த அம்சம் முன்னதாக டிசப்பியரிங் மெசேஜஸ் என்ற பெயரில் காணப்பட்டது. தற்சமயம் இது டெலீட் மெசேஜஸ் என்ற பெயரில் சோதனை செய்யப்படுகிறது. பயனர் அனுப்பிய குறுந்தகவல்களை அழிக்கும் அம்சத்தினை வாட்ஸ்அப் டெலீட் ஃபார் எவ்ரிவொன் என்ற பெயரில் வழங்கியதைத் தொடர்ந்து இந்த அம்சத்தின் பெயர் மாற்றப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. புதிய டெலீட் மெசேஜஸ் அம்சம் பயனர் குறிப்பிட்ட நேரத்தை குறித்ததும், குறுந்தகவல் அந்த நேரத்தில் தானாக அழிந்துவிடும். இந்த அம்சம் முதற்கட்டமாக வாட்ஸ்அப் க்ரூப்களில் மட்டுமே சோதனை செய்யப்படுகிறது. மேலும் இதனை க்ரூப் அட்மின்கள் மட்டுமே இயங்க வைக்க முடியும். தற்சமயம் தனிநபர் உரையாடல்களில் இந்த அம்சத்தை பயனர்கள் பயன்படுத்த முடியாது. புதிய அம்சம் மூலம் பயனர்கள் தங்களின் பழைய குறுந்தகவல்களை அழிப்பதன் மூலம் போன் ஸ்டோரேஜ் அளவை சேமிக்க முடியும். புதிய அம்சம் சோதனை செய்யப்படுவதால், விரைவில் அனைவருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

NPR Documents – ஜூனில் மக்கள் தொகை பதிவேடு பணி.!!!

தமிழ்நாட்டில் தேசிய மக்கள் தொகை பதிவேடு பணி ஜூன் மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது. மொபைல் ஆப் மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேடு விவரங்கள் சேகரிக்கப்படும் ஒரே இடத்தில் 6 மாதம் (அ)...

வெளிநாட்டு வேலைக்கு போறவங்களுக்கு மத்திய அரசின் அறிவிப்பு.!!!

ஜனவரியில் இருந்து கட்டாய நடைமுறை மத்திய அரசிடம் பதிவு செய்யாவிட்டால் வெளிநாட்டு வேலைக்கு போக முடியாது   சவூதி, மலேசியா உட்பட 18 நாடுகளுக்கு பொருந்தும். * தொழிலாளர் பாதுகாப்புக்காக அதிரடி நடவடிக்கை.    சவூதி அரேபியா உட்பட 18 நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இந்தியர்கள், மத்திய அரசின் குடியேற்ற இணையதளத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் வெளிநாடு செல்ல முடியாது. இந்த நடைமுறை ஜனவரியில் இருந்து அமலுக்கு வருகிறது. வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இந்தியர்கள் பலர் கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். பலர் வேலை இழந்தும், அடிமைகளாக நடத்தப்பட்டும் அல்லல்படுகின்றனர். இந்த அவல நிலையை போக்கும் முயற்சியாக, வெளிநாடு செல்லும் இந்தியர்கள் தூதரகங்கள், குடியேற்ற இணையதளத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறது. இதற்கிடையில், வெளிநாடு செல்லும் இந்திய தொழிலாளர்களுக்கு மத்திய அரசு புதிய கட்டாய நடைமுறையை செயல்படுத்த உள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நான்-இசிஆர்’ எனப்படும் குடியேற்ற விசாரணை அவசியம் அல்லாத பாஸ்போர்ட் வைத்துள்ளவர்கள், ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், இந்தோனேஷியா, ஈராக், ஜோர்டான், குவைத், லெபனான், லிபியா, மலேசியா, ஓமன், கத்தா, சவூதி அரேபியா, சூடான், தெற்கு சூடான், சிரியா, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட், ஏமன் ஆகிய 18 நாடுகளுக்கு செல்லும்போது, வெளியுறவு அமைச்சகத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். வெளிநாடு செல்வதற்கு 24 மணி நேரம் முன்பாகவே www.emigrate.gov.in இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.  மேற்கண்ட வசதி கடந்த 2017ம் ஆண்டு டிசம்பரில் இருந்து நடைமுறையில் உள்ளது. ஆனால், கட்டாயம் ஆக்கப்படவில்லை. தொழிலாளர்கள் விருப்பத்தின் பேரில் இதில் பதிவு செய்து வந்தனர். சோதனை முறையில் செய்படுத்தப்பட்ட இந்த நடைமுறை சிறப்பாக அமைந்துள்ளது.  இதை தொடர்ந்து இந்த நடைமுறை அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதியில் இருந்து கட்டாயம் ஆக்கப்படுகிறது. மேற்கண்ட குடியேற்ற இணையதளத்தில் பதிவு செய்யாத, நான்-இசிஆர் பாஸ்போர்ட் வைத்துள்ள தொழிலாளர்கள் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான உதவி மையத்தை அணுகலாம். அல்லது 1800 11 3090 (கட்டணம் இல்லாதது), 01140503090 (கட்டணங்கள் உண்டு) எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். helpline@mea.gov.in முகவரிக்கும் இமெயில் அனுப்பி விளக்கம் பெறலாம் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குடியுரிமை சட்டம்: கேள்வி பதில்களாக மத்திய அரசு விளக்கம்.!!!

குடியுரிமை சட்டம்: கேள்வி பதில்களாக மத்திய அரசு விளக்கம் இந்திய குடியுரிமை திருத்த சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) பற்றி தவறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. பொய் பிரசாரத்தால் மக்கள் மனதில் சிலர்...

Follow us

0FansLike
0FollowersFollow
1,310SubscribersSubscribe

Latest news