பள்ளி விடுமுறை நாட்களில் வழங்கப்படும் பயிற்சிக்கு ஈடுசெய்யும் விடுப்பு உண்டா? CM CELL Reply.!!!
அரசாணை நிலை எண் 62 , பள்ளிக் கல்வித்துறை, நாள் - 13.03.2015ன் படி , பயிற்சி நாட்கள் விடுமுறை நாட்களாக இருப்பின் 10 நாட்களுக்கு மிகாமல் ஈடுசெய் விடுப்பாக அனுமதிக்கலாம் என்ற விவரம் மனுதாரருக்கு தூத்துக்குடி முதன்மைக் கல்வி அலுவலக ஓ.மு.எண் - 5574/அ5/2019 நாள் - 09.11.2019ன் படி தெரிவிக்கப்படுகிறது.
பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்கப்படுமா? PM CELL Reply.!!!
அரசாணை எண். 177/ பள்ளிக்கல்வி C2 துறை நாள். 11.11.2011-ன் படி, பகுதி நேர ஆசிரியர்கள் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டுள்ளதால் ஆண்டு ஊதிய உயர்வு வழங்க இயலாது.
இத்திட்டம் முடியும் வரை பகுதி நேர ஆசிரியர்கள் தற்காலிக பணியாளர்களாக கருதப்படுவர்.
- கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்,
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி,
கடலூர்
ஆசிரியர்கள் பணியில் இருந்து கொண்டே M.Ed படிக்க முடியுமா? CM CELL Reply.!!!
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரிபவர்கள் பகுதி நேரமாகவோ தொலைதூர கல்வி மூலமாகவோ மேல் அலுவலரிடம் அனுமதி பெற்று வேறு கல்வி பயில வேண்டும்.
பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலம்...