தேவையான பொருட்கள்
நற்பதமான பாகற்காய் – 1-2
எலுமிச்சை – 1/2
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – 1 சிட்டிகை
செய்முறை
முதலில் பாகற்காயை கழுவி, தோலை நீக்கிவிட வேண்டும்.

பின் அதனுள் இருக்கும் விதைகளை நீக்கி, காயை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு பௌல் நீரில் 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து 10 நிமிடம் அந்நீரில் பாகற்காய் துண்டுகளை ஊற வைக்க வேண்டும்.

10 நிமிடம் கழித்து, ஊற வைத்த பாகற்காய் துண்டுகளை மிக்ஸியில் போட்டு, நீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதை வடிகட்டி, அத்துடன் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

குறிப்பு: வேண்டுமானால், இந்த ஜூஸ் உடன் மிளகுத் தூள் மற்றும் இஞ்சி சாற்றினையும் சேர்த்துக் கொள்ளலாம்.

பாகற்காய் ஜூஸை ஒரு நாளைக்கு 50-100 மிலி வரை குடிக்கலாம்.

நன்மைகள்
பாகற்காய் ஜூஸ் குடலை சுத்தம் செய்ய உதவுவதோடு, பல்வேறு வகையான கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்யும்.
பாகற்காய் ஜூஸில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது மற்றும் இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும்.
ஒருவர் தினமும் பாகற்காய் ஜூஸைக் குடித்து வந்தால், அது பார்வை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கும்.
பாகற்காய் ஜூஸை கண்களைச் சுற்றி தடவி வந்தால், அது கருவளையங்களைப் போக்கும்.
புற்றுநோய் வராமல் இருக்க நினைத்தால், அவ்வப்போது பாகற்காய் ஜூஸைக் குடியுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here