ஒரு மனிதனுக்கு உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு தூக்கம் தான். ஒரு நாளைக்கு 8 மணி நேரமாவது மனிதன் உறங்க வேண்டும்.

இல்லையென்றால் 6 மணி நேரமாவது தூக்கம் வேண்டும். 6 மணி நேரத்திற்கு கீழ் மனிதன் உறங்கினால் கண்டிப்பாக சில பிரச்சினைகள் உடலில் ஏற்பட ஆரம்பிக்கும்.

சரியான தூக்கம் இல்லையென்றால் கண்கள் சோர்வடையும். தலைவலி அதிகமாக இருக்கும். தூக்கமின்மைக்கு மனஅழுத்தம் கூட காரணமாக இருக்கலாம்.

நிம்மதியான தூக்கம் பெற
 • தூக்கச் செல்லும்போது மது அருந்துவதைத் தவிருங்கள்.
 • பகல் நேரத்தில் போதிய அளவு உடற்பயிற்சி செய்யுங்கள்.
 • மதிய தூக்கத்தை தவிர்த்துவிடுங்கள்.
 • டீ, காபி குடிக்கும் பழக்கத்தை விட்டுவிடுங்கள்.
 • படுப்பதற்கு நான்கு மணி நேரத்துக்கு முன்னதாக இரவு உணவை சாப்பிடுங்கள்.
 • சர்க்கரை நோய் உள்ளவர்களை தூங்கும்போது எழுப்பிவிடக்கூடாது. இதனால் அவர்களுக்கு மறுபடியும் தூக்கம் வராமல் சிரமப்படுவார்கள்.
 • தூங்க போகும்போது அதிக நீர் குடிக்கக்கூடாது. இதனால் இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். இதனால் தூக்கம் கெடும்.
 • படுக்க செல்லும்போது இளம்சூடான நீரில் குளிக்கலாம்.
 • தினமும் தியானம் செய்வது நல்லது.
 • படுக்கும்போது புத்தகங்களை படித்தால் நன்றாக தூக்கம் வரும்.
 • படுக்கும்போது மெதுவான அதிர்வலையில் மனதிற்கு இதமான, பிடித்த பாடல்களை கேட்டால் நன்றாக தூக்கம் வரும்.
 • முடிந்தால் இரவில் பல் துலக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்வது நல்லது.
 • படுக்கை அறைகள் தூங்குவதற்கு ஏற்ற இடமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
 • தலையணைகளை பஞ்சுபோல் இருத்தல் நல்லது. உயரமான தலையணையை வைத்து தூங்குவது கழுத்திற்கு நல்லதல்ல.
 • படுக்கை அறையில் நிறைய பொருட்களை குவித்து வைக்காமல், குளுமையான அறையில் படுத்தால் நன்றாக தூக்கம் வரும்.
 • முக்கியமாக டி.வி.கள், ஸ்மார்ட்போன்கள் இரவு தூங்கப் போகும் நேரத்தில் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
 • செல்போன்களை அதிகமாக இரவு நேரங்களில் பயன்படுத்தினால் தூக்கம் கெட்டுப்போவதுடன், கண்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here