*மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரின் உருக்கமான பதிவு*

அழித்தொழிப்போம் உயிர்க்கொல்லியை!

*கொரோனா ..*
உலகை நடுங்க வைக்கும்
ஒற்றைச் சொல்!
உலகமே பதறிக் கிடக்கிறது.
கண்ணுக்குத் தெரியாத இந்த உயிர்க்கொல்லியின்
வேகத்திற்கு எதிராக துணிந்து நிற்பது மட்டுமல்ல
ஒவ்வொருவரும் இடைவெளிவிட்டு தூர நிற்பதே
சாலச் சிறந்தது.

வெள்ளிக்கிழமை அதிகாலை 1.00 மணியளவில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு
ஆய்வுக்குச் சென்ற போது,
காற்றுப் புகாத கவச உடையும் முகக்கவசமும் அணிந்த
அவர்களிடம் கனிவுடன் கேட்டேன்
உங்களுக்கு ஏதாவது சிரமம் இருக்கிறதா என்று…
மருத்துவர் ஒருவர் சொன்னார்..
“சேவை செய்வதே எங்கள் பணி…
மனமாரச் செய்கிறோம் ..
ஆனால் ஒரு சிரமம்,
கவச உடையணிந்துள்ளதால்
தாகத்திற்கு தண்ணீர்
குடிக்கத்தான் முடியவில்லை..” என்று.
I was emotional….
என் கண்களில் கண்ணீர் நிறைந்தது.
மகத்தான மருத்துவசேவை கண்டு
மலைத்துப் போனேன்.
இதையெல்லாம் உணர்ந்து
நாம் விழிப்போடு இருக்கவும்,
விழிப்புணர்வு ஏற்படுத்தவும்
அறைகூவல் விடுக்கின்றேன்.

அசுரத்தனமான வேகத்தில் பணியாற்றினால் மட்டுமே ஒவ்வொரு உயிருக்கும் பாதுகாப்பு என்பதால்
ஊண் உறக்கமின்றி
கால நேரம் பாராது கணப்பொழுதும் ஓயாது
சுற்றிச் சுழன்று மகத்தான
சேவை செய்கிறது
நமது தமிழக அரசு.

மெச்சுகிறேன் நம் மருத்துவத் துறையை!
நெஞ்சார நெகிழ்ந்து பாராட்டுகிறேன்!
நம் சேவைகளால் வெல்லட்டும் மனிதம்!
வீழட்டும் உயிர்க்கொல்லி!

அன்புடன்
Dr.C.விஜயபாஸ்கர்
மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர்…

உங்களால் பெருமை அடைகின்றோம் ஐயா…
Sigaramsathish

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here