முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடுவதால் ஏதேனும் பாதிப்புகள் உண்டா?

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே முட்டையை விரும்பி சாப்பிடுவதுண்டு. இந்த முட்டையில் அதிகப்படியான சத்துக்கள் உள்ளது . இதில் அதிகப்படியான புரதச்சத்து நிறைந்ததுள்ளது. இது மலிவான விலையில்கிடைப்பதால் அனைவரும் விரும்பி சாப்பிடுவதுண்டு.

நமது உடலுக்கு தேவையான ஊட்ட சத்துக்களை அளிக்கும் தாய் பாலுக்கு, அடுத்தபடியாக அணைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்ட உணவு எதுவென்று பார்த்தால் அது முட்டை தான். முட்டையில், இறைச்சிக்கு நிகரான அணைத்து சத்துக்களும் உள்ளது. எனவே தற்போதெல்லாம் அசைவ விரும்பிகள் கூட உணவில் முட்டையை சேர்த்துக் கொள்கின்றனர்.

அதிலும், இந்த முட்டையை சாப்பிடுபவர்களின் அதிகமானோர் வெள்ளை கருவை சாப்பிட்டு விட்டு, மஞ்சள் கருவை ஒதுக்குவதுண்டு. ஏன்னென்றால், இந்த மஞ்சள் கருவை சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும் என கூறுகின்றனர்.

முட்டையின் வெள்ளைக் கருவைவிட மஞ்சள்கருவில்தான் அதிக ஊட்டச்சத்துத்துக்கள் நிறைந்துள்ளன. வைட்டமின் ஏ, பி, இ, டி மற்றும் கே, அமினோ அமிலங்கள், ஃபோலிக் அமிலம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கொழுப்பு, கோலின், செலினியம், துத்தநாகம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

இது உடல் ஆரோக்கியததாகி மேம்படுத்த உதவுகிறது. வெள்ளைக் கருவில் புரதம் மட்டுமே நிறைந்துள்ளது. ஆனால், மஞ்சள்கருவில் புரதமும் கொழுப்பும் நிறைந்துள்ளன. மேலும், மாயாஜால் கருவில் உள்ள சத்துக்கள் மார்பக புற்றுநோய் குடல் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது.

மேலும், இது உடலில் இரத்த சிவப்பணுக்களின் எணிக்கையை அதிகரிக்க செய்து, உடலில் ஆக்சிஜன் சீராக பரவி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here