மருந்துடன் ஆப்பிள், மருந்துடன் எலுமிச்சை ஆகியவையும் எடுக்கக்கூடாது என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள். காய்ச்சல் அல்லது வேறு விதமான உடல்பாதிப்புகளுக்கு மாத்திரைகள் எடுக்கும் போது, உடன் ஆப்பிள் சாறு அருந்துவதை தவிர்க்க வேண்டும். மருந்தின் வீரியத்தை, இரத்த ஓட்டம் உறிஞ்சு கொள்வதை தடுக்கும் வகையில் ஆப்பிள் வீரியமாக செயல்படுகிறது. குறிப்பாக, 100 சதவீதம் உறிஞ்ச வேண்டிய மருந்தின் வீரியத்தை, 70% ஆவதை விடவும் குறைத்து விடுகிறது.

அதே போன்று, இருமலுக்கான டானிக் எடுக்கும் போதும், எலுமிச்சை கலந்த உணவையோ பழச்சாறையோ எடுக்க கூடாது. எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலமானது, மருந்தை இரத்ததில் கலப்பதை தடுக்க கூடிய சக்தியை கொண்டது. அல்லது வேறு விதமான பக்க விளையும் உண்டாக்க வாய்ப்புண்டு.

குறிப்பு

மேற்கண்ட அனைத்து காம்பினேஷன்களில் நீங்கள் உணவு பொருளை சேர்த்து எடுக்கும் போது கண்டிப்பாக ஒவ்வாமையும் சிலவேளை, சிக்கலான உடல்நலக் குறைபாட்டையும் கொண்டு வந்துவிடும். இவை தவிர, நாம் அனைவருக்கும் தெரிந்த வேறு எதிரெதிர் உணவுகளும் சில உண்டு.

இறைச்சி சாப்பிடும் போதும், ஆல்கஹால் எடுத்துகொள்ளும் போதும், இனிப்பு நிறைந்த பொருள் அல்லது சுத்தமான தேனை தவிர்க்க வேண்டும். இறைச்சியோடு முள்ளங்கி சேர்த்து சாப்பிடுவதும் கூடாது. இது இரத்தத்தில் நச்சுத்தன்மையை உண்டாக்கிவிடும். கீரை தானியங்களோடு இறைச்சியை சேர்த்து சாப்பிடகூடாது. பால் மற்றும் தயிரையும் அசைவ உணவில் சேர்க்க கூடாது.

உணவுகள் சுவைமிக்க சத்துமிக்க உணவாக இருந்தாலும் கூட, இதுபோல் சேர்த்து எடுக்கும் போது, அதன் தன்மை உடலில் நச்சு கலப்பை உண்டாக்கிவிடும். இதனால் அதிகம் பாதிப்படைவது செரிமான உறுப்பும், வயிறும் தான். அதனால் உணவில் கவனம் செலுத்தும் போதே என்ன உண்கிறோம் என்பதிலும் கவனம் செலுத்துங்கள்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here