நாம் அதிக விலை கொடுத்து வாங்கும் உணவு வகைகளுக்கு கொடுக்கும் மதிப்பு சாதரணமாக எம் வீடுகளில் கிடைக்கும் பொருட்களுக்கு கொடுப்பது இல்லை. அப்படி எம்மால் ஒதுக்கப் படும் சில உணவு வகைகளில் கறிவேப்பிலையும் ஒன்று. எம் வீடுகளில் எம்மால் உருவாக்க முடிந்த சாதாரண மரம் தான் இது.

இதன் இலைகளில் இருக்கும் ஆரோக்கியம் மற்றும் சக்திகளை நாம் எப்போதுமே உணர்ந்தது இல்லை. கறியில் கிடந்தால் கூட தூக்கி போட்டுவிட்டு தான் சாப்பிடுவோம். இன்று நாம் கறிவேப்பிலையில் நன்மைகள் பற்றி அறிந்துகொள்வோம். காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை சாப்பிட்டால் உடல் எடை சீக்கிரமே குறைந்து விடும்.

இரத்த சோகை நோயால் அவஸ்தை படுபவர்கள் தினமும் காலையில் ஒரு பேரீச்சம் பழத்துடன் கொஞ்சம் கறிவேப்பிலை சாப்பிட்டு வந்தால் உடனடி தீர்வு கிடைக்கும்.சர்க்கரை நோய் உள்ளவர்கள் காலையில் கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும். கல்லீரல் பிரச்சனைக்கு கறிவேப்பிலையை சாப்பிட்டு வர விடுதலை கிடைக்கும்.

கர்ப்பிணி பெண்கள் கறிவேப்பிலை சாறுடன் எலுமிச்சை சாறு, தேன் கலந்து குடிக்க உட்சாகம் கிடைப்பதோடு குமட்டல் போன்றவை நிக்கும், இது மட்டும் இல்லைங்க சளி, இருதய பிரச்சனைகள், பார்வை குறைபாடுகள், மற்றும் பல நோய்களுக்கு கறிவேப்பிலை தீர்வாகிறது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here