~~~~~~~
அறிக்கை
19.01.2020
~~~~~~~~~
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
=============
இந்த ஆண்டு 5ம் வகுப பு மற்றும் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு என்று அரசு அறிவித்துள்ள நிலையில் மாணவர்கள் பயிலும் பள்ளியில் எழுதமுடியாத நிலை ஏற்பட வாய்ப்பு இதனால் கிராமப்புற மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட வாய்ப்பு ஏற்படும்

தமிழக அரசு பொதுத் தேர்வை கைவிட வேண்டும் இல்லையேல் பயிலும் பள்ளிகளிலயே தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் சா.அருணன் தமிழக அரசிற்கு வேண்டுகோள்
~~~~~~~~~~~

தமிழகத்தில் முதன்முறையாக இந்த கல்வி ஆண்டில், 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுபோன்ற தேர்வு முறையால், மாணவர்கள் உளவியல் ரீதியான பாதிப்பு ஏற்படும் என கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், பொதுத்தேர்வு நடத்தும் முடிவில் இருந்து பள்ளிக் கல்வித்துறை பின்வாங்கவில்லை. திட்டமிட்டபடி 5ம் வகுப்பு, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதையொட்டி, ஒவ்வொரு மாவட்டத்திலும் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்விஅலுவலர் தலைமையில், மாவட்ட தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளன. அதில், பொதுத்தேர்வு நடைபெறும் வட்டார கல்வி அலுவலர்கள் உயர்நிலைப்பள்ளி , மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் ,வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

மேலும், முதன்முறையாக பொதுத்தேர்வு எழுதும் 5ம், 8ம் வகுப்பு மாணவர்கள், தாங்கள் படிக்கும் சொந்த பள்ளியில் தேர்வு எழுத முடியாது. 5ம் வகுப்பு மாணவர்கள் ஒரு கிலோ மீட்டர் முதல் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேறொரு பள்ளியிலும், 8ம் வகுப்பு மாணவர்கள் 3 கிமீ முதல் 5 கி.மீ தொலைவில் உள்ள வேறொரு பள்ளியிலும் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பட்டியல், தற்போது மாநிலம் முழுவதும் தயாரிக்கப்பட்டு வருகிறது

மேலும், எந்தெந்த மையங்களில் எந்தெந்த பள்ளி மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர், தேர்வு மைய பொறுப்பாளர்கள், வினாத்தாள் கட்டுக் காப்பாளர்கள் ஆகியோரின் விபரங்கள் தயாரிக்கப்பட்டு, பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தபடி, வினாத்தாள் அச்சிடப்பட உள்ளன. அவ்வாறு அச்சிடப்படும் வினாத்தாள்கள், முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பவும். அங்கிருந்து குறுவள மையம் (சிஆர்சி) அமைந்துள்ள பள்ளிகளுக்கு அனுப்பவும் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதேபோல், விடைத்தாள் திருத்தும் பணி சம்பந்தப்பட்ட குறுவள மைய அளவில் நடைபெறும் எனவும், விடைத்தாள் திருத்தும் மையத்துக்கு நேரில் சென்று ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களை

தங்களுடைய சொந்த பள்ளியில் தேர்வு எழுத அனுமதிக்காமல், வேறொரு பள்ளியில் தேர்வு எழுத வைப்பது பல்வேறு நிலைகளில் மாணவர்களுக்கு பெற்றோர்களுக்கு குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், மாணவர்களை தேர்வு மையங்களுக்கு அழைத்துச் செல்வதில் பெற்றோர்களுக்கு மிகவும் சிரமம் ஏற்படும் மாணவர்கள் என்பதை குழந்தகள் மன உளைச்சல் ஏற்படும். கட்டாயம் ஆரம்ப கல்வி இடைநிலை கல்வியில் மாணவர்களில. இடைநிறுத்தம் அதிக அளவில் இருக்கும் என்பதில் ஐயம் இல்லை,

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் பெரும்பாலான பள்ளி மாணவர்கள், தங்களுடைய சொந்த பள்ளிகளிலேயே தேர்வு எழுதுகின்ற நிலையில், முதன்முறையாக தேர்வு எழுதும் 5ம் வகுப்பு, 8ம் வகுப்பு மாணவர்களை தான் பயிலும் பள்ளிகளிலயே தேர்வு எழுத அனுதிக்க வேண்டும், அப்படி அனுமதித்தால் தான் மாணவர்களுக்கு ஓரளவாவது மண உளைச்சல் ஏற்படாமல் தேர்வு எழுத முடியும்

மூன்று ஆண்டுகள் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று அரசு தெரிவித்திருந்தாலும் வருங்காலங்களில் தொடக்க நிலை இடைநிலை கல்வி மாணவர்கள் மிகவும் பாதிக்க படுவார்கள் ஏன் எனில் கிராப்புறத்தில் இருக்கும் அரசு பள்ளிகளில் மிக ஏழ்மைநிலையில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்த்துவருகின்றனர் அதிலும் குடும்ப சூழ்நிலைகள் வெவ்வேறு விதமாக இருக்கின்றன. தந்தை இழந்து இருப்பார்கள், தாயை இழந்திருப்பார்கள் ,இரண்டு பேரையும் இழந்து இருப்பார்கள்

இது போன்ற மாணவர்கள் உறவினர்கள் தங்கி படிப்பார்கள். அவர்கள் தேர்ச்சி தொடர்ந்தால். தொடர்ந்து அவர்களை பள்ளிக்கு அனுப்புவார்கள் இல்லையேல் அவர்கள் கல்வி கேள்வி குறியாகும் சூழ்நிலை உள்ளது.இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு கிராமப்புற மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க விதமாக அவர்கள் பயிலும்பள்ளிகளிலயே தேர்வு எழுத அனுதிக்க வேண்டும் இல்லை எனில் பழைய முறையிலயே தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்
~~~~~~~~
சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
~~~~~~~~~
9445454044
~~~~~~~~~

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here