குடற்புண் (Peptic ulcer) அல்லது வயிற்றுப்புண் என்பது இரைப்பை உணவுக்குழாய் பாதையில் ஏற்படும் சீழ்ப்புண் ஆகும். இது பொதுவாக அமிலத்தன்மையுடையது.

வயிற்றில் உணவை ஜீரணிக்க ஹைட்ரோ குளோரிக் அமிலம் உள்ளது. இந்த அமிலம் அதிகம் சுரப்பதால் இரைப்பை மற்றும் சிறுகுடல்கள் சுவர்களில் உள்ள மியூக்கோஸா படலம் சிதைத்து குடற்புண் உண்டாக்குகிறது.

கார உணவு, நேரந்தவறிய உணவு, அதீத உணவு, மசாலா நிறைந்த உணவு, அசைவ உணவு. இதைத் தவிர அடிக்கடி சாப்பிடும் வலி நிவாரண மாத்திரைகளும் குடற்புண்கள் உருவாக்கலாம்.

இதனை தவரிக்க அடிக்கடி மாத்திரை எடுப்பதை தவிர்த்து விட்டு ஆரோக்கியம் நிறைந்த உணவுகளும், சூப்களும் குடிப்பதே சிறந்ததாகும்.

அதிலும் மணத்தக்காளிக்கீரை சூப் குடற்புண்களை போக்க சிறந்த ஒரு மருந்தாகும்.

அந்தவகையில் தற்போது இந்த அற்புத சூப்பை எப்படி தயாரிப்பது என்பதை பற்றி இங்கு பார்ப்போம்

தேவையான பொருட்கள்
  • மணத்தக்காளிக் கீரை – ஒரு கட்டு
  • மிளகு – 10
  • சீரகம் – ஒரு ஸ்பூன்
  • பூண்டு – 10 பல்
  • இஞ்சி – ஒரு துண்டு
  • தனியா – ஒரு ஸ்பூன்
  • வெங்காயம் – 50 கிராம்
  • வெந்தயம் – அரை ஸ்பூன்
  • மஞ்சள், உப்பு – தேவையான அளவு
  • பெருங்காயம் – தேவையான அளவு
செய்முறை

முதலில் கீரையை நன்கு அலசி ஆய்ந்து நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.

வெந்தயத்தை வறுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் நறுக்கி வைத்துள்ள கீரையை போடவும்.

பின்பு அதில் மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி, தனியா, வெந்தயம் ஆகியவற்றைத் தட்டி கீரையுடன் சேர்க்கவும்.

நறுக்கி வைத்துள்ள வெங்காயம், மஞ்சள், உப்பு, பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி வைத்து குடிக்கவும்.

இந்த சூப்பை குடற்புண்களால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து குடித்து வந்தால் குடற்புண்களை ஆற்றுவதில் இதற்கு மிஞ்சிய மருந்தே இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here