EducationTN.com-Teachers Zone

கடந்த கல்வி ஆண்டில் நடந்த மேல்நிலை வகுப்பு பொதுத்தேர்வின் விடைத்தாள் மதிப் பிடும் பணியில் , கவனக்குறைவாக செயல்பட்ட 70 முதுகலை ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு , வேலூர் முதன்மைக் கல்வி அதிகாரி மார்ஸ் நோட்டிஸ் அனுப்பி அதிரடித்துள்ளார் .

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு , பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது . மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இந்த தேர்வுகளின் விடைத்தாள் மதிப்பிடும் பணி என்பது , தேர்வுப்பணியை விட முக்கியத்துவம் வாய்ந்தது . 10ம் வகுப்பு விடைத்தாளை பட்டதாரி ஆசிரியர்களும் , மேல்நிலை வகுப்பு விடைத்தாள்களை முதுகலை ஆசிரியர்களும் மதிப்பீடு செய்கின்றனர்.

இந்த பணியின்போது , ஆசிரியர்கள் கவனக் குறைவாக செயல்படுவதால் , மதிப்பெண் விவகாரத்தில் குளறுபடி ஏற்பட்டு மாணவர்களின் எதிர்காலம் பாதிப்பதாக அரசுத்தேர்வுகள் துறைக்கு புகார்கள் சென்றன .

கடந்த கல்வி ஆண்டில் நடந்த பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பிடும் பணியில் , மாணவர் களின் மதிப்பெண் விவரத்தில் மாறுதல் இருப்பது , மறுமதிப்பீடு செய்தபோது கண்டறியப்பட்டது . இதையடுத்து , சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் , கடந்த கல்வி ஆண்டில் மேல்நிலை வகுப்பு பொதுத் தேர்வின்போது கவனக்குறைவாக செயல்பட்டதாக அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் 70 பேரிடம் விளக்கம்கேட்டு முதன்மைக் கல்வி அதிகாரி மார்ஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here