கோவைக்காய் நாம் தினமும் அதிகளவு உண்டுவந்தால் நம் உடலில் ஏற்படும் பலவகையான நோய்களை குணப்படுத்திவிட முடியும். இது அதிகமாக புதர்களில் காணப்படுகிறது. இதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நரம்பு மற்றும் கண்களுக்கு நல்லது

சர்க்கரை நோயினால் நரம்பு, கண் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படுவதையும் கோவைக்காய் சரிசெய்கிறது. சர்க்கரை குறைபாட்டைத் தீர்க்க கோவைக்காய் உதவும் என்பதால், இதை மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். கோவைக்காயில் இருக்கும் ஆண்டி-ஆக்சிடெண்ட்கள் சர்க்கரை நோய்க்கு தனியாக மாத்திரைகள் சாப்பிடுவதை ஈடு செய்கின்றன.

பல் பிரச்சனைகளுக்கு நல்லது

பல் வலி, ஈறுகளில் வலி, வீக்கம், ஈறுகளில் ரத்தக் கசிவு, மஞ்சள் கறை அனைத்தையும் கோவைக்காய் ஜூஸ் குறைக்கிறது.

மலச்சிக்கல் பிரச்சனை தீரும்

வாரத்தில் இருமுறை கோவைக்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை செய்து சேர்த்து சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறுகள், மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.

உடல் எடை குறையும்

உடலுக்கு தேவையான பல சத்துகள் கொண்ட, கொழுப்பை கரைக்கக்கூடிய கோவைக்காய் உணவுகளில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வருவது உடல் எடையை குறைக்கும்.

தோல் நோய்களுக்கு சிறந்தது

சொரியாசிஸ், படை, சிரங்கு, தேமல் நோயிகளுக்கு தினமும் மூன்று வேளை இந்த கோவக்காயை அரைத்து குடித்து வந்தால் சிறந்த பலன் கிடைக்கும். மேலும் இந்த கோவைக்காய் ஜூஸ் குடிப்பதற்கு முன்பு வயிற்றை நன்றாக சுத்தம் செய்த பின்பு குடிக்க வேண்டும்.

பொடுகு மாறும்

தலையில் பொடுகு, முடி உதிர்வு, இவைகளுக்கு இந்த கோவைக்காய் ஜூஸ் குடிப்பதோடு அரைத்த அந்த சக்கையை எலும்பிச்சை பழத்துடன் சேர்த்து தடவி வந்தால் பொடுகு ஏற்படுவது குறைந்து விடும்.

கெட்ட கழிவுகள் வெளியேறும்

மசாலா அதிகம் சேர்க்கப்பட்டுள்ள உணவுகள், கடை சாப்பாடு இவைகளால் உடலில் கெட்ட கழிவுகள் அதிகரிக்கும்.கோவைக்காய் சாப்பிடும் போது உடலுள் சேரும் கெட்ட கழிவுகளை நீக்கும்.

வாய்ப்புண் குணமாகும்

கோவைக்காயை வாரம் இரண்டு நாள் உணவில் சேர்த்தால் வாய்ப்புண் குணமாகும். பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டாலே வாய்ப்புண் ஆறிடும்.

புண் விரைவில் ஆறும்

மூச்சு இரைத்தல், வாந்தி, வாய்வு, ரத்த சோகை, பித்தம், காமாலை முதலான பிரச்னைகளை குணப்படுத்தும். கடிகளால் ஏற்பட்ட காயங்களின் மீது கோவை இலையை அரைத்து வைத்துக் கட்டினால் புண் விரைவில் ஆறும்.

சிறுநீரக கற்கள் கரையும்

கோவைக்காயின் உவர்ப்பான சுவை வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளைச் சரி செய்கிறது. சிலருக்குச் சாப்பிட்டவுடன் வயிற்றில் வலி, எரிச்சல் இருக்கும். சில நேரங்களில் வாயுத்தொல்லை உடலுக்குள் உருண்டோடும். கோவைக்காய் சாப்பிடுவதன் மூலமாக இவற்றை உடனடியாக சரிசெய்யலாம்.

கோவைக்காய் அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து, சிறுநீரகங்களின் நலம் காக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here