புதுச்சேரியில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று(டிச.13) அரையாண்டுத் தேர்வுகள் தொடங்கும் நிலையில், தேர்வுக் கூடங்களில் மாற்றுப் பள்ளி ஆசிரியர்களை மேற்பார்வையா ளராக பணியமர்த்தும் புதிய முறை யால் மாணவர்களின் கல்வி நிலை மேம்படுமா என்ற கேள்வி முன் வைக்கப்படுகிறது.

பொதுத்தேர்வுகள் தவிர மற்ற தேர்வுகள் அந்தந்தப் பள்ளி ஆசிரியர்களை மேற் பார்வையாளர்களாக கொண்டே நடத்தப்பட்டு வருகின்றன. இந் நிலையில், அரையாண்டுத் தேர்வுக்கு தேர்வுக் கூடங்களில் வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களை மேற்பார்வை யாளராகப் பணியமர்த்துவது என்ற உத்தரவை புதுச்சேரி கல்வித் துறை பிறப்பித்துள்ளது.

பொதுத் தேர்வுக்கு மாண வர்களை மன ரீதியாக தயார்படுத்தும் வகையிலும், பொதுத் தேர்வு எப்படிப்பட்ட சூழலில் நடைபெறும் என்பதை மாணவர்களுக்கு முன்னரே புரிய வைக்கும் வகையிலும் இம்முறை கொண்டுவரப்படுவதாகக் கூறப்படுகிறது. இது மாணவர்களின் கல்விநிலையை உயர்த்த உதவும் என்றும் குறிப்பிடப்படுகிறது.

ஆனால், இது மாணவர்களுக்கு எந்த வகையிலும் பலனளிக்காது, மாறாக பாதிப்பையே ஏற்படுத்தும் என பல ஆசிரியர்கள் தெரிவிக் கின்றனர்.

இதுகுறித்து புதுச்சேரி அரசு பட்டதாரி ஆசிரியர்கள் சங்க பொதுச் செயலாளர் கே.பாரி கூறியது:புதுச்சேரிக்கென தனி கல்வி வாரியம், பாடத்திட்டம் கிடையாது. தமிழகத்தில் உள்ள முறையே பின்பற்றப்படுகிறது. இனி வரும் காலங்களில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பள்ளிகளில் நடத்தப்படும் காலாண்டு, அரையாண்டு உள்ளிட்ட தேர்வுகளில் இத்தகைய முறை பின்பற்றப்படும் என கல்வித் துறை குறிப்பிட்டுள்ளது. 1 முதல் 9 -ம் வகுப்பு வரை பொதுத் தேர்வு இல்லை. அப்படியெனில் அந்த மாணவர்களுக்கும் இம்முறை பின்பற்றப்படுவது ஏன்?.

தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் விரும்பி கற்கும் வகையில், பயமில்லாத நிலையில் கற்றல் மற்றும் தேர்வு எழுதும் சூழல் இருக்க வேண்டும் என்று அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், தேர்வு எழுதும்போது மேற்பார்வையாளராக இதுவரை தனக்கு அறிமுகமில்லாத ஆசிரியரைப் பார்க்கும்போது தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு மன ரீதியாக ஒருவித அச்சம் ஏற்படவே செய்யும். அனை வருக்கும் கல்வி உரிமைச் சட்டம் புதுச்சேரியில் முறையாக அமல்படுத்தப்படாத காரணத்தால் இங்கு 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை என்றாகி விட்டது. பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கும் இத்தகைய முறையால் எவ்வித பலனும் ஏற்படாது. தமிழகம் உள்ளிட்ட எந்த மாநிலங்களிலும் இந்த முறை நடைமுறையில் இல்லை என்பதால் இம்முறையை அரசு கைவிடுவதே சிறந்தது என்றார்.

கல்வி நிலை மேம்படும்இதுகுறித்து காரைக்கால் முதன்மைக் கல்வி அதிகாரி ஏ.அல்லி கூறியபோது, “பொதுத் தேர்வு எழுதச் செல்லும் மாணவர் களை முன்கூட்டியே பயமின்றி எதிர்கொள்ளும் வகையில் தயார் படுத்தும் விதமாக இந்த முறை இருக்கும். இது மாணவர்களின் கல்வி நிலையை மேம்படுத்தும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here