தினமும் 10 – 15 இலைகளை கொதிக்க வைத்த குடிக்க வேண்டும்..!

நீரிழிவு நோயாளிகள் மில்லியன் கணக்கில் உருவாகியுள்ளனர். அதனால்தான் அதன் மீது சிறப்பு கவனம் பெற உலகமே நீரிழிவுக்கு என தனி நாளைக் கொண்டாடி வருகிறது. நீரிழிவு நோயாளிகளும் எதை சாப்பிட்டால் குறைக்கலாம் என்று தேடி தேடி உணவை உண்ணுகின்றனர். இப்படி நோய் வந்தபிறகு பதறுவதை விட வரும் முன் காப்பதே சிறந்தது.

சரி எல்லாம் ஒரு புறம் இருக்க…இந்த மா இலையை சாப்பிட்டால் நீரிழிவு நோய் குறையும் என்பது உங்களுக்குத் தெரியுமா..?

ஆம்.. மா இலையில் உள்ள சத்துகள் இரத்தத்தின் சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்ள உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மா இலையில் இருக்கும் enzyme alpha glucosidase சத்து கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தை குறைக்க உதவும். இதனால் இரத்தத்தில் குளுகோஸ் அளவையும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவும். மேலும் அதில் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் பெக்டின் ஆகியவை நிறைவாக உள்ளன. இதனால் நீரிழிவோடு, கொழுப்புச் சத்து பிரச்னையையும் சரிசெய்ய உதவும்.

இதனாலேயே ஆராய்ச்சியாளர்கள் மா இலைகளைக் கொண்ட மாத்திரைகள் வர வேண்டும் என்று கூறுகின்றனர்.

மா இலையை எப்படி பயன்படுத்த வேண்டும் ..?

10- 15 மா இலையை தண்ணீரில் நன்குக் கொதிக்க வையுங்கள். பின் அந்த தண்ணீரை இலையோடு இரவு முழுவதும் ஊற வையுங்கள். மறுநாள் காலை இலைகளை வடிகட்டி தண்ணீரை வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் குடியுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால் நிச்சயம் நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.

அதற்காக வெறும் மா இலையை மட்டும் குடிக்காதீர்கள். இதோடு உங்கள் உணவு முறையிலும் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். வாழ்க்கை முறையையும் சரியாகப் பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here