5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொது தேர்வில் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கு மட்டும் தான் பொது தேர்வு நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான 62 – வது குடியரசு தின தடகளப் போட்டிகள் திருச்சியில் இன்று துவங்கியது. தொட்டியம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் தடகளப் போட்டிகளைஇளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.இன்று முதல் வரும் 23ஆம் தேதி வரை 6 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில்மாநிலம் முழுவதும் இருந்து 2099 மாணவிகள், 2236 மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இவ்விழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “எல்லா துறைகளிலும் தமிழ்நாடு முன்னிலை வகித்து வருகிறது

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்செங்கோட்டையன், விளையாட்டு வீரர்களுக்கு வாரம் ஒருமுறை முழு நாள் பயிற்சி அளிக்கவும், அதே போல விளையாட்டு வீரர்களுக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் நூறு ரூபாய் ஊக்கதொகையை அதிகரித்து தரவும் நடவடிக்கை எடுக்கப்படும். 30 வருடம் பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு பெறலாம் என்ற விஷயம் பரிசீலனையில் உள்ளது. ஒரு வார காலத்திற்குள் அது குறித்து அறிவிக்கப்படும். நிதி ஆயோக் தர குறியீட்டில் இந்த கல்வி ஆண்டில் தமிழ்நாடு முதல் இடம் பிடிக்கும் என்கிற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தமிழ்நாடு தான் பள்ளி இடை நிற்றலில் குறைவாக இருப்பதில் முதலிடம் பிடித்திருக்கிறது. 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொது தேர்வில் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கு மட்டும் தான் பொது தேர்வு நடைபெறும். இந்த பொது தேர்வு மாணவர்களின் கல்வி திறனை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். மாணவர்களும், பெற்றோர்களும் அச்சப்பட தேவையில்லை. மாணவர்கள் இடை நிற்றல் என்கிற நிலைக்கு தமிழ்நாடு வழி வகுக்காது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here