தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரி அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
டில்லியில் கடந்த செப்.,26ல் நடந்த தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு கூட்டம் நடந்தது. இதில், நாடு முழுவதும் புதிதாக துவங்க உள்ள 31 மருத்துவ கல்லூரிகளின் பட்டியல் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 6 கல்லூரிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொறு கல்லூரிக்கும் மத்திய அரசு சார்பில் ரூ.195 கோடியும், மாநில அரசு சார்பில் ரூ.130 கோடியும் ஒதுக்கப்படவுள்ளது.
அரசாணை
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அமையவுள்ள புதிய மருத்துவ கல்லூரிகளுக்கான அரசாணை, இன்று (நவ.,12) வெளியிடப்பட்டது. முதற்கட்டமாக, 6 மருத்துவக்கல்லூரிகளுக்கும் தலா ரூ.100 கோடி ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எங்கெங்கு?
புதிய மருத்துவக்கல்லூரி அமையவுள்ள மாவட்டங்கள்
* திருப்பூர்
* நீலகிரி
* ராமநாதபுரம்
* நாமக்கல்
* திண்டுக்கல்
* விருதுநகர்