இன்றைக்கு பரவலாக அனைவரையும் தாக்கக்கூடிய நோய் “சிறுநீரக கல்” பிரச்சினை. சிறுநீரகத்தில் சிறுநீர் உற்பத்தியாகி சிறுநீர் குழாய் வழியே, சிறுநீர் பைகளுக்கு வந்து, வெளியேறுகிறது. சிறுநீரக கல்லும் சிறுநீரகத்தில் தான் உற்பத்தியாகிறது.

சிறுநீரில் உள்ள உப்பு அதாவது கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை ஓன்று திரண்டு, சிறுநீர் பாதையில் பல்வேறு அளவுகளைக் கொண்ட கற்களை உருவாக்குகிறது. அந்த கல் அங்கேயே தங்கி, வளர்ந்து அடைப்பை ஏற்படுத்துகிறது.

இந்த வேளையில் சிறுநீரக கற்கள் சொல்ல முடியாத வலியைக் ஏற்படுத்தும். மட்டுமல்லாது சிறுநீரக பாதையில் தொற்றுதலைக் கொண்டு வந்து, சிறுநீரகங்களை சேதப்படுத்தும். இந்த பிரச்சினையை சரிசெய்ய மிகவும் எளிய இந்த மருத்துவத்தை செய்து பாருங்கள்.

இது எளிய முறையில் தயார் செய்யப்படும் ஓர் கசாயம். இந்த கசாயத்தை காலை, மாலை என இரண்டு வேளை செய்து குடித்தாலே உங்கள் வயிற்றில் இருக்கக் கூடிய சிறுநீரக கல்( கிட்னி ஸ்டோன்) சிறுநீர் மூலமாகவே கரைந்து வெளியாகும்.

தேவையானவை

நெல்லிக்காய் பவுடர்
தண்ணீர்
எலுமிச்சை பழம்

பொதுவாக நெல்லிக்காய் சாப்பிட்டால் முடி நன்றாக வளரும், நல்ல கண்பார்வை கிடைக்கும் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஓன்று. ஆனால் இந்த நெல்லிக்காய் சிறுநீரக கல்லை வெளியேற்றும் என்பது அநேகம் பேருக்கு தெரியாது.

இந்த கசாயம் செய்வதற்கு நெல்லிக்காய் பொடி அவசியமான ஒன்றாகும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

செய்முறை

முதலில் ஒரு டம்ப்ளர் வெதுவெதுப்பான தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும். இந்த தண்ணீரில் 2 ஸ்பூன் நெல்லிக்காய் பவுடரை சேர்த்து விட்டு, இதை நன்றாக அந்த தண்ணீரில் கலந்து விட வேண்டும்.

கலந்த பிறகு இதனுடன் பாதி எலுமிச்சை பழத்தை பிழிந்து விடுங்க. இதை திரும்பவும் நன்றாக கலக்கி விட வேண்டும். இந்த நெல்லைக்காய் பவுடர் உங்களுடைய கிட்னியை சுத்தப்படுத்துவது மட்டுமல்லாமல் வயிற்றையே சுத்தப்படுத்திவிடும்.

மட்டுமல்லாது வேறு ஏதாவது தொற்றுகள் இருந்தாலும் அதையும் கரைத்து விடும். இந்த கசாயத்தை காலை 1 டம்பளர் மாலை 1 டம்பளர் என 2 வேளை குடிக்க வேண்டும்.

காலையில் குடிக்கும் போது காலை உணவு அருந்திய பிறகும், மாலையில் 5 மணியளவிலும் குடிக்க வேண்டும். இதே போன்று தொடர்ந்து நீங்கள் செய்து வரும் போது சிறுநீரக கல் தானாகவே கரையும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here