நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு செலவே இல்லாமல் மூன்று மூலப்பொருட்களைக் கொண்டு நிவாரணம் பெறலாம்.

வெந்தயம் – 250 கிராம்,
ஓமம் – 100 கிராம்,
கருஞ்சீரகம் – 50 கிராம்.

மேலே உள்ள மூன்று பொருட்களை சுத்தம் செய்து தனித்தனியாக வறுத்து தூள் செய்து கலவையை தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இக்கலவையை ஒரு டீஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான தண்ணீருடன் உட்கொள்ள வேண்டும். இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக்கூடாது. தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

☆ நன்மைகள்:

1) நம் உடலில் தேங்கியிருக்கும் அனைத்து நச்சுக் கழிவுகள் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது. தேவையற்ற கொழுப்பு எரிக்கப்பட்டு நீக்கப்படுகிறது.

2) ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது. ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளை நீக்குகிறது. இதயம் சீராக இயங்க உதவுகிறது.

3) சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீக்கப்படுகிறது. உடலில் உறுதியும் தோளில் மினுமினுப்பும் சுறுசுறுப்பும் உண்டாகிறது.

4) எலும்புகள் உறுதி அடைந்து எலும்பு தேய்மானம் நீங்குகிறது. ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள் வலிமை அடைகிறது. கண்பார்வை, நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது.

5) மலச்சிக்கல் நீங்குகிறது. நினைவாற்றல் கேட்கும் திறன் அதிகரிக்கிறது. பெண்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது. மருந்துகளின் பக்க விளைவுகளை நீக்குகிறது.

6) ஆண்-பெண் சம்பந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது. நீரிழிவுநோய் பராமரிக்கப்படுகிறது.

இந்த கலவையை இரண்டு, மூன்று மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குறைகிறது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here