👉 இன்றைய உலகில் மருந்துகள் ஏராளமாக சாப்பிட்டால் இருமல் உடனடியாக நிற்பதில்லை. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இருமல் ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்க சிறிது காலம் தேவைப்படும். ஆனால் உடனடியாக இருமலை நிறுத்த வேண்டுமென ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது அவற்றைத் தொடர்ந்து அதிக காலம் எடுத்துக் கொள்ள வேண்டி வரும். இதனால் பக்க விளைவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.

👉 வரட்டு இருமல்: பால் – முட்டை: பாலை அடுப்பில் வைத்து நன்றாக பொங்கும் போது முட்டையின் மஞ்சள் கருவை அதில் சில நிமிடங்கள் கலக்கிய பின்னர், அடுப்பை அணைத்து விட வேண்டும். சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நிலைக்கு வந்ததும் அதில் தேன் கலந்து பருகி வந்தால் வரட்டு இருமல் வராமல் போய்விடும். தினமும் இரவு உணவு முடிந்ததும் இந்த பாலை அருந்த வேண்டும்.

👉 கொள்ளு சூப்: சிறிதளவு கொள்ளை எடுத்து வாணலியில் இட்டு பொன்னிறமாக வறுத்து பொடி செய்து பின்னர் மிளகு, பூண்டு மற்றும் சுக்கு மூன்றையும் பொடி செய்து கொள்ளவும். தேவையான அளவு தண்ணீரில் இரு பொடிகளையும் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இரண்டு நாள் தொடர்ந்து சற்று சூடாக குடித்து வந்தால் அனைத்து இருமல் ஓடிவிடும்.

👉 புதினா: புதினாவை துவையலாகவோ அல்லது சூப் செய்தோ சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமலில் இருந்து எளிதில் விடுபடலாம்.

👉 பனங்கற்கண்டு: நன்கு காய்ச்சிய பாலில் ஒரு சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்து சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து மூன்று நாள் தொடர்ந்து அருந்தி வந்தால் எளிதில் சரியாகும்.

👉 இஞ்சி: இருமல் உடனே குணமாக வேண்டுமெனில் சிறிய இஞ்சித் துண்டு ஒன்றை சிறிதளவு உப்பைத் தூவி அதோடு துளசி இலையை சேர்த்து மென்ற போது இருமல் தானாக குணமாகும்.

👉 பூண்டு: பூண்டுப்பல் போன்றவற்றை நெய்யில் நன்கு வதக்கி அதை அம்மியில் வைத்து நசுக்கி சூப்பில் அல்லது குழம்பில் போட்டு சூடு ஆறுவதற்கு முன்பு சாப்பிட்டால் இருமல் குணமாக இது ஒரு நல்ல தீர்வாகும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here