பூமி சுற்றும் வேகத்தை மாற்றிய சீனா ! எப்படி சாத்தியமானது

1) சீனா ஒரு பிரம்மாண்டமான அணையைக்கட்டிஇருக்கிறது. இது உலகிலேயே மிகப்பெரிய அணை. இந்தியாவின் எல்லா அணைகளிலும் உள்ள தண்ணீரின் கொள்ளளவைக் காட்டிலும் சீனா கட்டிய இந்த.அணையின் தண்ணீரின் கொள்ளளவு அதிகம். முப்பள்ளத்தாக்கு அணை (Three Gorges Dam) என்று
இதற்குப் பெயர் வைத்துள்ளனர் .

இந்த அணையைக் கட்டியதன் மூலம், பூமி
தன்னைத்தானே சுற்றிக் கொள்ளும் வேகத்தைக்குறைத்து விட்டது சீனா. இதன்காரணமாக ஒரு நாள் என்பது 24 மணி நேரத்தை விட சிறிது அதிகமாகி.விட்டது.

3) இந்த அணை 2012-ல் செயல்பாட்டுக்குவந்தது. உலகிலேயே அதிகமான நீர் மின்சாரம் இந்த அணையில்
உற்பத்தி செய்யப்பட்டது. 2014இல் இந்த அணை நீர் மின் உற்பத்தியில் உலக சாதனை (world record) நிகழ்த்தியது.

மேலும் விவரங்களுக்கு பொது அறிவுப் புத்தகத்தை அல்லது மனோரமா year book படியுங்கள். இந்த அணையின் பிரம்மாண்டங்களில் பின்வரும்
விஷயங்களில் இயற்பியல் அக்கறை.கொள்கிறது. அணையின் reservoir கடல் மட்டத்திற்கு மேல் 175 மீட்டர் (அதாவது 575 அடி) உயரம் உடையது. நீரின் கொள்ளளவு= 39.3 கன கிலோ மீட்டர் அணையில் உள்ள நீரின் நிறை (mass)=39 ட்ரில்லியன் கிலோகிராம். 1 trillion = 10^12. அதாவது 1 டிரில்லியன் என்பது 1 லட்சம் கோடி ஆகும். எனவே நீரின் நிறை
39.3 லட்சம் கோடி கிலோகிராம் ஆகும்.
இந்த அணை சீனாவில் உள்ளது.

அதாவது பூமியில் உள்ளது. 575 அடி உயரத்தில் உள்ள 39 ட்ரில்லியன் கிலோகிராம் நிறையை வைத்துக்
கொண்டு பூமி தன்னைத்தானே சுற்ற வேண்டும். பூமி தன்னைத்தானே சுற்றும் வேகம் பூமத்திய ரேகைப் பகுதியில் மணிக்கு 1670 கி,மீ (பூமிசூரியனைச் சுற்றும் வேகம் மணிக்கு தோராயமாக
ஒரு லட்சம் கிலோமீட்டர்). சீனாவின் இந்த
அணையையும் சுமந்து கொண்டு பூமி தன்னைத் தானே சுற்றும்போது, moment of inertia அதிகமாகி விடுகிறது. இதனால் சுற்றுவதன் வேகம் சிறிது
குறைகிறது. வேகம் குறைவதால், நேரம் அதிகமாகிறது..இதனால் ஒரு நாள் என்பது 24 மணி நேரத்தையும்விட அதிகமாகிறது. எவ்வளவு அதிகமாகி உள்ளது
என்று நாசா கணக்கிட்டுள்ளது. அதன்படி 0.06 மைக்ரோசெகண்ட் நேரம் அதிகமாகி உள்ளது. சன் யாட் சென் காலத்தில், 100 ஆண்டுகளுக்கு முன்பே இந்த அணையைக் கட்ட வேண்டும் என்று
சீனா விரும்பியது.

டெங் சியோ பிங் சீன அதிபராக
இருந்தபோது, அணையைக் கட்டும் வேலை
தொடங்கியது. 15 ஆண்டுகளில் ஆணை கட்டி முடிக்கப்பட்டது ஆக கடவுள் படைத்த பூமியின் வேகத்தை.மனிதன் மாற்றி விட்டான், இந்த தகவல் தற்போது பலருக்கும் பெரும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here