தினமும் வெளியில் சாப்பிடுபவர்கள்? அல்லது ஒரே இடத்தில் அமர்ந்து மனஅழுத்தம் நிறைந்த வேலை செய்பவர்கள் இதய ஆபத்துக்கள் வர அதிக வாய்ப்புண்டு, மனித உடலுக்கு போதுமான இயக்கம் என்பது மிக அவசியமான ஒன்று. அப்பொழுது தான் உடல் உறுப்புகள் ஆரோக்கியமான இருக்கும்.

இதயம், நுரையீரல், சிறுநீரகம், மூளை மற்றும் கல்லீரல் ஆகியவை மனித உடலில் மிக முக்கிய உறுப்புகள். இந்த உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகள் மிக பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். உதாரணத்திற்கு, மூளையில் ஏற்படும் சிறிய அடைப்பு மனித உடலில் வாதத்தை ஏற்படுத்தி உடலின் ஒட்டு மொத்த இயக்கத்தையும் நிறுத்திவிடும்.

அல்லது மூளையை செயலிழக்க செய்துவிடும். அதேபோல் இதயத்திற்கு செல்லும் இரத்தத்தில் சிறிது குறைந்தாலும் இதய நோய்கள் அல்லது மாரடைப்பு ஏற்படும். எனவே, இது போன்ற உடலின் முக்கியமான உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தினசரி உடல் இயக்கமும் முக்கியம்.

எப்படியிருந்தாலும், ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, உடல் பருமன், மருந்துகளின் பக்கவிளைவு போன்றவற்றால் இரத்தக் குழாய்களில் அடைப்போ அல்லது கொழுப்பு போன்றவை சேர்ந்து இதயத்திற்கு செல்லும் இரத்தத்தில் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

எனவே, இரத்தக் குழாய்களில் இருக்கும் அடைப்பை இயற்கையான முறையில் போக்குவதற்கும், இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இங்கே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியமுறை மிகவும் உதவிகரமாக இருக்கும்

தேவையானப் பொருட்கள்

    பசலைக் கீரை ஜூஸ் – 1/2 டம்ளர்
    வறுத்த ஆளி விதை – 1 டேபிள் ஸ்பூன்.

ஜூஸ் செய்முறை

ஒரு டம்ளர் பசலைக் கீரையுடன் குறிப்பிட்ட அளவு ஆளி விதை சேர்க்க வேண்டும். நன்கு கலக்கி கொள்ளுங்கள். இந்த ஜூஸை தினமும் காலை உணவிற்கு பின் குறைந்தது 2 மாதத்திற்கு குடிக்கவேண்டும்.

கொழுப்பை கரைக்கும்
இந்த ஜூஸை தினமும் குடித்து வரும் போது இயற்கையான முறையில் இதய இரத்தக் குழாயிகளை சுத்தம் செய்து, இதயத்தை எப்பொழுதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

இந்த ஜூஸை குடிக்கும் நீங்கள் கண்டிப்பாக கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள், எண்ணெய் பலகாரங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டியது அவசியம். மேலும், தினமும் உடற்பயிற்சி செய்வது உடல் பருமன் அதிகரிக்காமல் தடுத்து உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கும்.

ரத்தத்தை சுத்தமாக்கும் :
பசலைக் கீரையில் புரதச்சத்து, இரும்புச் சத்து, பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகியவை அதிக அளவில் உள்ளது.

பசலைக் கீரை உடலில் ஆரோக்கியமான இரத்த செல்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். ஆளி விதையில் நார்ச்சத்துக்களும், வைட்டமின் ஈ இரண்டுமே இரத்தக் குழாய்களில் சேர்ந்திருக்கக்கூடிய அசுத்தங்களை அகற்றி, இரத்த ஓட்டத்தை சீராக்கும்.

உடலுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு கொலஸ்ட்ரால் தேவைப்படுகிறது. ஆனால் அது நல்ல கொலஸ்ட்ராலாக இருக்க வேண்டும். உடல் பருமனாக இருக்கும் போது நிச்சயமாக உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கும். இதனால், பலரும் இன்று கொலஸ்ட்ரால் பாதிப்பால் அவதிப்படுகின்றனர். உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் படிவதற்கு முக்கிய காரணம், ஒழுங்கற்ற உணவுப் பழக்கம் மற்றும் ஜன்க் உணவுகளை எடுத்துக் கொள்வது போன்றவை.

இந்த உணவுகள் சரியான முறையில் செரிமானம் ஆகாமல், இவை கொலஸ்ட்ராலாக இரத்த குழாய்களில் படிந்து உடலுக்கு சேதம் விளைவிக்கிறது. செம்பருத்தி டீயில் உள்ள அன்டி ஆக்சிடென்ட் , உடலின் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. ஆரோக்கியமான உடலுக்கு, தினமும் செம்பருத்தி டீ பருகுவது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here