அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள திட்ட இணையாளர் மற்றும் திட்ட தொழில்நுட்பவியலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு பொறியியல் மற்றும் டிப்ளமோ படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் வரும் அக்டோபர் 28ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

Anna University Recruitment 2019: அண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா?
Anna University Recruitment 2019: அண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா?

நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம்

மொத்த காலிப் பணியிடம் : 03

பணி மற்றும் காலிப் பணியிட விபரம்:-

  • திட்ட இணையாளர் : 02
  • திட்ட தொழில்நுட்பவியலாளர் : 01

கல்வித் தகுதி :

திட்ட இணையாளர் : பி.இ, பி.டெக், எம்.இ, எம்.டெக், எம்.எஸ்சி

திட்ட தொழில்நுட்பவியலாளர் : டிப்ளமோ

ஊதியம் : ரூ.15,000 முதல் ரூ.60,000 வரையில்

(பணிகளுக்கு ஏற்ப ஊதியம் மாறுபடும். அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்)

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.annauniv.edu என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Dr. E. Natarajan Professor & Coordinator, Anna University, Chennai.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 28.10.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அறிவிப்பு லிங்க் அல்லது www.annauniv.edu என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் காணவும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here