சென்னை:யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங், நாளை நடைபெற உள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளுக்கு, 600 இடங்கள் உள்ளன. சமீபத்தில் நடந்த, முதற்கட்ட கவுன்சிலிங்கில், 467 இடங்கள் நிரம்பின.இரண்டாம் கட்ட கவுன்சிலிங், சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள, அரசு சித்தா மருத்துவமனை வளாகத்தில் நாளை நடைபெற உள்ளது.இதில், காத்திருப்போர் பட்டியலில் உள்ள, 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களை, www.tnhealth.org என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here