சென்னை: சத்துணவு திட்டத்தில் பணிபுரியும் 1,81,752 பேர் வருங்கால வைப்பு நிதி கணக்கை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசின் சத்துணவு மற்றும்  குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பணிபுரியும் 1,81,752 பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதியில் 2018-2019-ம் வருடத்திற்கான பொது வருங்கால வைப்பு நிதி கணக்குத்தாள்கள், சென்னை 600025, அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தால்  தயாரிக்கப்பட்டுள்ளது. கணக்குத்தாள்களை சந்தாதாரர்கள்

http://cps.tn.gov.in/nmp/public

http://cps.tn.gov.in/nmp/public என்ற இணையதள முகவரியில் நாளை (11ம் தேதி) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here