சிலருக்கு கொஞ்சம் நேரம் வேலை செய்தாலே உடல் ரொம்ப களைத்து போய் விடும். உடல் களைத்து போவது மட்டுமல்லாமல் உடல் வலி, முதுகுவலி, மூட்டு வலி, இடுப்பு வலி அப்டின்னு பல பிரச்சினைகள் வரும்.

இதனாலே நாம் தினமும் செய்து வரக்கூடிய வேலைகள் கூட செய்ய முடியாமல் தடைபடும். மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியமும் கெட்டு போகும். இவற்றிலிருந்து விடுபட ஏற்ற உணவுப் பொருள் உப்புக்கடலை.

உடல்வலி, மூட்டுவலி, உடல் சோர்வு, இடுப்புவலி, இரத்த குறைபாடு போன்றவற்றிற்கு நாம் பயன்படுத்தப் போவது உப்புக்கடலை. இதனை சிலர் உப்புக்கடலை என்றும் சிலர் வறுத்த கொண்டைக்கடலை என்றும் சொல்வார்கள்.

இந்த வறுத்த கொண்டைக்கடலையை நாம் சிறு வயதில் அதிக அளவு சாப்பிடுவோம். ஆனால் அதனை இப்போது மொத்தமாகவே மறந்து விட்டோம். இதனால் தான் நமக்கு உடல் சோர்வு, மூளை சுறு சுறுப்பின்மை, உடல்வலி போன்ற பிரசினைகள் ஏற்படுகிறது.

அதற்கு ஒரு கைப்பிடி அளவு வறுத்த உப்புக்கடலையை எடுத்து அதனுடன் ஒரு துண்டு பாகு வெல்லத்தை சின்ன சின்ன தூளாக பொடித்து இரண்டையும் நன்றாக கலந்து மாலை வேளையில் சாப்பிட வேண்டும்.

இதனை சாப்பிட பிறகு ஒரு டம்ப்ளர் பால் குடிக்கலாம். இதனால் நாம் இழந்த கால்சியத்தை திரும்ப பெற முடியும். இரத்த சோகையை போக்கலாம். உடலை எப்பொழுதுமே சுறுசுறுப்பாக வைத்திருக்கலாம்.

உடல் சோர்வு என்பது ஆயுசுக்கும் எட்டிப்பார்க்காது. அதுபோல இந்த கால்சியம் குறைபாடு, இரத்த குறைபாடால் உண்டாகிற உடல் வலி, இடுப்பு வலி, மூட்டுவலி, முதுகுவலி போன்றவை வராது.

மூளையும் சுறுசுறுப்பாக செயல்படும். அதனாலே இதை சிறு பிள்ளைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்களோடே உடல் வளர்ச்சியையும், மூளை வளர்ச்சியையும் இது மேம்படுத்தும்.

நீங்க இதை இன்றைக்கே ட்ரை பண்ணி பாருங்க. நீங்க ஆச்சரிய படும் அளவிற்கு உங்களது உடலையும், மூளையையும் ஆரோக்கிய படுத்தும்.

அதுமட்டுமல்லாமல் நீங்கள் 60 வயதிலும் கூட 30 வயதுக்கு உண்டான ஆரோக்கியமுடனும், சுறுசுறுப்புடனும் செயல்படலாம்.

இந்த டிப்ஸ் உங்களுக்கும் பயன்படக்கூடியதாக இருக்கும். நீங்க பயன்படுத்துங்க மறந்திடாதீங்க .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here