தமிழகத்தில் காலியாக உள்ள கிராம சுகாதார செவிலியர் 1234 பணியிடங்களை நிரப்புவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ள பெண் பதிவுதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.

தமிழக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, கிராம சுகாதார செவிலியர் பணிக்கு ஆட்தேர்வு நடைபெறுகிறது. இதற்கு பெண் விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.

கல்வித்தகுதி:
பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சியுடன்,பல்நோக்கு சுகாதார பணியாளர் பயிற்சி முடித்திருக்க வேண்டும். அதை தமிழ்நாடு செவிலியர் மற்றும் பேறுகால மருத்துவப்பணிக்கான கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்யாத விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. இந்தியன் நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில், செவிலியர் பயிற்சி பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், பயிற்சி முடித்தமையை பதிவு செய்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:
1.7.2019 தேதியின்படி விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 57 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். முற்பட்ட வகுப்பினராக இருந்தால், 40 வயதுக்கு உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

தேர்வு முறை:
மாநில அளவிலான பதிவுமூப்புப்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களாக இருக்க வேண்டும். மேற்கண்ட கல்வித்தகுதியும், பதிவு மூப்பும் உள்ளவர்கள், சென்னை சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகத்துக்கு நாளை (அக்டோபர் 4ம் தேதிக்குள்) ஆஜராக வேண்டும். வரும் போது விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் கல்விச்சான்றிதழ், புகைப்படம், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தமைக்கான அடையாள அட்டை ஆகியவற்றை கொண்டு வரவேண்டும்.

கிராம சுகாதார செவிலியர் பணி வேலைவாய்ப்பு தொடர்பான முழுமையான விபரங்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்:
https://drive.google.com/file/d/1pS-3y73DtTn5K6Oz_tXZ8BNfv_Vx6jc7/view

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here