*வீறுதமிழுக்கு விழாவாக நடைபெற்ற வீறுகவியரசர் முடியரசனார் நூற்றாண்டுத் தொடக்கவிழா*

காரைக்குடி, வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம் ஒருங்கிணைத்து நடத்திய *வீறுகவியரசர் முடியரசனாரின் நூற்றாண்டுத் தொடக்க விழா அக்டோபர்-7* அன்று சுபலெட்சுமி மகால் காரைக்குடியில் நடந்தது. நிகழ்வில் வீறுகவியரசரின் மாணாக்கர் *சீர்வளர்சீர்.மெய்யப்ப ஞான தேசிக சுவாமிகள்(கோவிலூர் ஆதீனம்)* முடியரசனாரின் திருவுருவப்படத்தைத் திறந்துவைத்து வாழ்த்திப்பேசினார். *பேரா.கு.மு.காதர்மொகிதீன் (இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர், மேனாள் பாராளுமன்ற உறுப்பினர்)* அவர்கள் தலைமை வகித்து முடியரசனார் கவிதைகளில் முனைவர் பட்டம் பெற்றமைக்காக முனைவர்.தமிழ் முடியரசன், முனைவர்.இரா.வனிதா, முனைவர்.கு.கண்ணன், முனைவர்.சேது கல்பனா ஆகியோருக்கு அவைக்களப் பாராட்டுப் பட்டயம் வழங்கிப்பேசினார். *முன்னாள் அமைச்சர் முகவை தென்னவன்* அவர்கள் தொடக்கவுரையாற்றினார். வீறுகவியரசர் இசைப்பாடல்கள் ஒலிப்பேழையினை வெளியிட்டு,
*முடியரசனார் ஒரு தமிழியக்கம்* எனும் தலைப்பில் *எழுச்சித்தமிழர்.தொல்.திருமாவளவன்* (தலைவர் வி.சி.க, பாரளுமன்ற உறுப்பினர்) அவர்கள் எழுச்சியுரையாற்றினார். சூலூர் பாவேந்தர் பேரவை நிறுவனர் *புலவர்.செந்தலை கவுதமன்* அவர்கள் *முடியரசனார் தேவைப்படுகிறார்* என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
முன்னதாக *பேரா.அரச முருகு பாண்டியன்* வரவேற்புரை வழங்க, அவைக்கள இணைச்செயலர் பாரதி பள்ளி தமிழாசிரியர் *முனைவர் இரா.வனிதா* செயல்பாட்டறிக்கை வாசித்தார்.

அவைக்களத்துணைத்தலைவர் *முனைவர்.இரெ.சந்திரமோகன்* அவர்கள் நன்றி கூறினார். ஆசிரியை முருகேசுவரி முடியரசனாரின் தமிழ் வணக்கமும், புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவன் முடியரசனார் வணக்கமும் பாடினர்.
பிற்பகல் விழாவில் *வீறுகவியரசரின் கவிவழித்தோன்றல் அவைக்களப் புரவலர் கவிச்சுடர்.கவிதைப்பித்தன்* வரவேற்புரையாற்றினார். *அருட்தந்தை அமுதன் அடிகளார்* விழாத்தலைமை வகித்துப்பேசினார். *திரு.கொங்குவேள் செல்லப்பனார் (பொது மேலாளர், லீ மெரிடியன் ஓட்டல்)* அவர்கள் எழுத்தாளர் பாரி முடியரசன் தொகுத்த *1.இவர்தாம் முடியரசர் வீறுகவியரசர்- மணிவாசகர் பதிப்பகம் 2.வீறுகவியரசர் முடியரசன் கவிதைகள் (தமிழம்)- சீதை பதிப்பகம்* ஆகிய நூல்களை வெளியிட, புரவலர்.சந்திரபாபு, புரவலர்.சே.செவந்தியப்பன், புரவலர்.சா.இராமன், ஓவியர்.முகுந்தன், கவிஞர் முத்தரசன், திருக்குறள் நாவை.சிவம், அவைக்களப் புரவலர் கவிச்சுடர்.கவிதைப்பித்தன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். மேலும்
*முடியரசன் முழக்கம் மின்னிதழ், வீறுகவியரசர் முடியரசன் வலைப்பூ* ஆகியனவற்றை வெளியிட்டும் *கலைச்செல்வி முடியரசன் அறக்கட்டளையைத்* தொடங்கிவைத்தும் வாழ்த்துரையாற்றினார். சிலம்பொலியாரின் நினைவேந்தல் நிகழ்வில் வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம் சார்பில் திறந்துவைக்கப்பெற்ற *சிலம்பொலியாரின் திருவுருவப்படத்தினை அவருடைய நினைவில்லத்தில் காட்சிக்கு வைக்கப்பெற வீறுகவியரசர் முடியரசன் அவைக்களத்தலைவர் பேரா.சே.செந்தமிழ்ப்பாவை* அவர்கள் சிலம்பொலியாரின் மகனார் கொங்குவேள் அவர்களிடம் வழங்கினார். தமிழகத்தின் சிறந்த 100 மரபுப்பாவலர்களுக்கு *வீறுகவியரசர் முடியரசனார் விருது* வழங்கி, *திராவிட நாட்டு வானம்பாடி* எனும் தலைப்பில் *சுப.வீரபாண்டியன் (பொதுச்செயலாளர்,திராவிட இயக்கத் தமிழர் பேரவை)* அவர்கள் சிறப்புரையாற்றினார். விருதுபெற்ற கவிஞர்கள் சார்பில் *பாவேந்தர் பாரதிதாசனின் மகள்வழிப்பெயர்த்தி புதுச்சேரி, மணிமேகலை குப்புசாமி* அவர்கள் ஏற்புரையாற்றினார். வீறுகவியரசர் முடியரசன் அவைக்கள நிறுவனர்
*எழுத்தாளர் பாரி முடியரசன்* அவர்கள் நன்றி கூறினார். நிகழ்ச்சித் தொகுப்பினை தே பிரித்தோ பள்ளி தமிழாசிரியர், அவைக்களச்செயலாளர் *முனைவர்.தமிழ் முடியரசன்* அவர்கள் வழங்கினார். விழாவின் தொடக்கத்தில் காரைக்குடி கலைக்கோவில் நாட்டியப்பள்ளி நிறுவனர் *கலைமாமணி மா.சுப.சரளா, சென்னை மருத்துவர் நிருபா* அவர்களின் இசை-நாட்டிய அரங்கம் நடைபெற்றது. விழாவில் *வீறுகவியரசர்க்கு நூற்றாண்டு மணிமண்டபம், சிலை* அமைக்க அரசிற்குக் கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பெற்றது. விழா நிகழ்வுகளை வீறுகவியரசர் அவைக்களத்தாருடன் இணைந்து *மாணவர் செயற்களத்தினர்* ஒருங்கிணைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here