பல நேரங்களில் இணையத்தில் இருக்கும் சில வீடியோக்களை தரவிறக்கி வைத்துக்கொள்ள நினைப்பீர்கள்.
அவற்றை எப்படி தரவிறக்குவது என்பதை இன்று பார்க்கலாம்.

இணையத்தினூடாகவே எந்த வித மென்பொருட்களும் நிறுவாமல் தரவிறக்கும் முறைகளை முதலில் பார்ப்போம்.
( பலருக்கு சில தளங்கள் தெரிந்திருக்கலாம். அவர்கள் தவிர்க்கவும். )

செய்முறை படங்கள் keepvid இற்கு உதாரணமாக காட்டப்படுகிறது. ஏனைய தளங்களுக்கும் பொதுவாக இதே செய்முறை பயன்படும்.

keepvid :
இணையத்தினூடாகவே தரவிறக்கிகொள்ளலாம். மிகவும் வேகமான தரவிறக்கத்தை தரும் ஒரு தளம்.
நீங்கள் தரவிறக்கவேண்டிய வீடியோவின் URL ஐ கொடுத்து Download ஐ அழுத்த வேண்டியது தான் வேலை.
[for Youtube, DailyMotion, Google Video, Vimeo மற்றும் இவை சார்ந்த தளங்களூடாக தரவிறக்க முடிகிறது. சில தளங்களில் தரவிறக்க முடிவதில்லை] தரவிறக்க சேவையை மென்பொருளாக தரவிறக்கி கணனியில் இலவசமாக பதிந்து கொள்ளலாம்.

SaveVid :
பிரபல வீடியோ தரவிறக்க இணையத்தளம். keepvid இன் வேகத்தை விட குறைவு ஆனால் செய்முறைகள் keepvid இற்கு ஒத்தவை.

ClipNabber
அனைத்து பிரபல மொழிகளிலும் தரவிறக்க சேவையை மேற்கொள்கிறது. சேவைகள் பொதுவானவை.

Deturl
இவ் இணையத்தளம் உங்களுக்கு தேவையான கோப்பு வகையில் இணைய வீடியோக்களை தரவிறக்க துணைபுரிகிறது.

Zamzar :
Deturl போன்று கோப்புக்களை மாற்றி தரவிறக்க முடிகிறது. வேகம் கூடியது.
Extension மற்றும் Plugin ஊடாக தரவிறக்க :

நன்மை : அனைத்து தளங்களில் இருந்தும் வீடியோக்களை தரவிறக்க முடியும். ( இணையத்தள ஒன்லைன் சேவைகளூடாக அனைத்து தளங்களிலும் தரவிறக்க முடியாது! )

FastestTube :
இவ் Extension ஐ தரவிறக்கி உங்கள் Browser இல் நிறுவிக்கொள்வதன் மூலம் எந்த தளத்திலிருந்தும் வீடியோக்களை தரவிறக்கிகொள்ள முடியும். ( வீடியோவிற்கு அருகில் Download என்ற ஒரு புது Button இந்த Extension மூலம் போடப்படும்! )
ஏற்புடைய உலாவிகள் Browser : Opera 11+,Safari 5+,Chrome,Firefox, Internet Explorer

Video DownloadHelper :
இது Firefox, Extension… Firefox உலாவியை பயன்படுத்துபவர்களுக்கு துணைபுரியும் உத்தியோக பூர்வ Extension.

கணனியில் நிறுவி பயன்படுத்தும் மென்பொருட்கள் :
நன்மை : வேகமானது, கோப்புவடிவங்களை மாற்றமுடியும், இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டு இணைக்கப்பட்டாலும் விட்ட இடத்தில் இருந்து தரவிறக்கம் ஆரம்பமாகும்.

நாம் நம்பிக்கையாக பரிந்துரைக்கும் தரவிறக்க மென்பொருள் :

Real Media Player இல் நாம் பெறும் மிகச்சிறந்த சேவை இது!
தரவிறக்கி பதிந்துகொள்ளுங்கள், எந்த இணையத்தளத்தில் இருந்தும் வேகமாகவும் தரமாகவும் வீடியோக்களை தரவிறக்கிகொள்ள முடியும்.
Download Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here