யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்ட மேற்படிப்புக்கு, வரும், 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.சென்னையில் உள்ள, அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லுாரியில், மூன்றாண்டு பட்ட மேற்படிப்புக்கு, 15 இடங்கள் உள்ளன.

இந்த இடங்களுக்கு, வரும், 18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பங்களை, www.tnhealth.org என்ற, சுகாதாரத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, ‘செயலர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை, அரும்பாக்கம், சென்னை – 106’ என்ற முகவரியில் சமர்பிக்க வேண்டும்.தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில் படித்திருப்பதுடன், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்தவர்கள் மட்டுமே, விண்ணப்பிக்க வேண்டும்.

மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு, 20ம் தேதி நடைபெறும் என, தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும், விபரங்களுக்கு, www.tnhealth.org என்ற, இணையளத்தை பார்வையிடலாம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here