நாள் முழுவதும் வேலை செய்துவிட்டு இரவு தூங்கும் போது கால் வலிக்கிறது, பாதங்கள் வலிக்கின்றன என்றுப் புலம்புவோர் பலர். குறிப்பாக வீட்டில் உள்ள அம்மாக்கள், வயதானவர்கள் இந்த வலியால் கடுமையாக அவதிப்படுவார்கள். இதற்குக் காரணம் சரியான ஊட்டச்சத்து இன்மையே..

 கால்சியம் குறைபாடு : கால்சியம் குறைபாட்டால் எலும்புகள் பலவீனமடைகின்றன. அதன் அறிகுறிதான் பாதங்களில் வலி ஏற்படுவது. எனவே கால்சியம் நிறைந்த பால், முட்டை, பாதாம், முளைக்கட்டிய தானியங்கள் போன்ற உணவுகளை தினமும் உட்கொண்டு வந்தால் எலும்புகள் உறுதியாகும்.

 இரும்புச் சத்துக் குறைபாடு : உடலில் போதுமான இரத்த ஓட்டம் இல்லை எனில் அதற்காக உடல் அழுத்தம் கொடுக்கத் துவங்கும்போது தசைகளில் வலி ஏற்படும். அதில் அதிகமாக பாதங்கள்தான் பாதிக்கப்படும். இதற்கு இரத்தத்தை அதிகரிக்கச் செய்யும் இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை கட்டாயம் தினமும் சாப்பிடுங்கள். இரத்த ஓட்டத்தின் குறைபாட்டை உணர்த்துவதில் பாத வலியும் ஒரு அறிகுறியாகும். இதற்கு உலர்ந்த திராட்சை, பேரிட்சை, மாதுளை, பெர்ரீ பழங்கள், உலர்ந்த பழங்கள் போன்றவற்றை தினமும் சாப்பிடலாம்.

 வைட்டமின் D பற்றாக்குறை : மேலே குறிப்பிட்ட இரண்டும் குறையும் போது வைட்டமின் D சத்தும் குறைய ஆரம்பிக்கும். இதுவும் எலும்புகளின் உறுதியைப் பாதிக்கும். இதன் குறைபாட்டை சரிசெய்யாவிட்டால் நாளுக்கு நாள் வலி அதிகரிக்கும். உடனடியாக வைட்டமின் D நிறைந்த சீஸ், பால், மீன் வகைகள், முட்டை போன்ற உணவுகளை தினமும் உட்கொள்ளுங்கள்.

வைட்டமின் D பற்றாக்குறை : மேலே குறிப்பிட்ட இரண்டும் குறையும் போது வைட்டமின் D சத்தும் குறைய ஆரம்பிக்கும். இதுவும் எலும்புகளின் உறுதியைப் பாதிக்கும். இதன் குறைபாட்டை சரிசெய்யாவிட்டால் நாளுக்கு நாள் வலி அதிகரிக்கும். உடனடியாக வைட்டமின் D நிறைந்த சீஸ், பால், மீன் வகைகள், முட்டை போன்ற உணவுகளை தினமும் உட்கொள்ளுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here