திண்டுக்கல்:பயோ மெட்ரிக் கருவியில் வருகை பதிவுக்காக பள்ளி ஆசிரியர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலம் தொடர்கிறது.

ஆசிரியர்களின் வருகை பதிவுக்கு பயோ மெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. உயர்நிலை, மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் பதிவிட்டு வருகின்றனர். பயோ மெட்ரிக் கருவி கணினியில் இணைக்கப்பட்டு, இணையம் மூலம் செயல்படுகிறது.வருகை மற்றும் புறப்படும் நேரத்தை வரையறுத்து அரசாணை வெளியிடாததால், ஆசிரியர்கள் காலை 9:15, மாலை 4:30 மணிக்கும், ஆசிரியர் அல்லாத அலுவலர்கள் காலை 10:00 மணி, மாலை 5:30 மணிக்கும் பதிவு செய்கின்றனர். தலைமை ஆசிரியர்கள் காலை 8:45க்கு வருகின்றனர்.ஒரு நிமிடம் ஆகிறதுஆதார் எண்ணின் கடைசி எட்டு இலக்க எண்ணை டைப் செய்த பிறகே, பயோமெட்ரிக் கருவியில் வருகையை பதிய முடியும். ஒவ்வொருவருக்கும் ஒரு நிமிடம் வரை செலவாகிறது. 30 ஆசிரியர்கள் இருந்தால் 30 நிமிடம் ஆகிறது.தலைமை ஆசிரியர் ஒருவர் கூறும்போது, ”கதவை திறந்தவுடன்கணினியை ஆன் செய்கிறோம். கணினி வேகத்தை பொறுத்து ஐந்து முதல் 10 நிமிடம் ஆகிறது. ஆதார் எண்ணின் கடைசி எட்டு இலக்க எண்ணை டைப்செய்த பிறகு, ஆசிரியரின் பெயர், புகைப்பட விபரங்கள் கணினியில் தோன்றும். அதன் பிறகே வருகையை பதிவு செய்ய முடியும்.பல நேரங்களில் இணைய இணைப்பு கிடைப்பதில்லை. மாநகராட்சி, நகராட்சி மற்றும் தனியார் நிறுவனங்களில் ‘சுவிட்சை ஆன்’ செய்த உடன் பயோ மெட்ரிக் வேலை செய்ய தொடங்குகிறது. இங்கு கணினியை பார்த்துகொண்டே நிற்க வேண்டியுள்ளது. காலத்திற்கேற்ப நவீன பயோ மெட்ரிக் கருவியை பொருத்த வேண்டும்,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here