சென்னை:”ஐந்து, எட்டாம் வகுப்பு தேர்வில், அனைவரும் தேர்ச்சி பெறுவர்,” என, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 

அவர் அளித்த பேட்டி:ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொது தேர்வு நடத்துவதில், தமிழகத்திற்கு, மூன்று ஆண்டுகளுக்கு விலக்கு பெறப்பட்டுள்ளது. அதனால், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறுவர்; யாரும், ‘பெயில்’ ஆக மாட்டார்கள்.அதேநேரத்தில், ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு, பொது தேர்வு முழுமையாக அமலுக்கு வந்தால், முப்பருவ தேர்வு முறை தேவையா என்ற, கேள்வி எழுகிறது. எனவே, இதை ரத்து செய்யலாமா என, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளேன்; அதன்பின், முடிவுகள் அறிவிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here