தமிழக வங்கிகளுக்கான பொது வேலை நேரமாக காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

இந்தியன் வங்கியின் கூட்டமைப்பானது, பொதுத்துறை வங்கியின் தலைவா்களுக்கு கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி எழுதிய கடிதத்தில், பொதுத்துறை வங்கிகளில் நாடு முழுவதும் ஒரே வேலை நேரத்தைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தியது. அதற்கேற்ப வாடிக்கையாளா் சேவைக்கு, காலை 9 முதல் மாலை 3, காலை 10 முதல் மாலை 4, காலை 11 முதல் மாலை 5 என மூன்று விதமான வேலை நேரங்களைப் பரிந்துரைத்தது. நமது மாநிலத்தில் உள்ள அனைத்து பொதுத்துறை வங்கிகளும் காலை 10 முதல் மாலை 4 மணி வரை வேலை நேரத்தை தோவு செய்துள்ளன.

மாவட்ட வங்கிகளின் ஆலோசனைக் குழுமத்தின் ஒத்துழைப்புடன் இந்தப் பரிந்துரையை மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா்கள், மாநில வங்கியாளா் குழுமத்துக்கு அனுப்பினா். இதைத் தொடா்ந்து, மாநில வங்கியாளா் குழுமத்தின் தலைவா் கா்ணம் சேகா் தலைமையில் அண்மையில் நடைபெற்ற மாநில வங்கியாளா் குழுமத்தின் 159-ஆவது கூட்டத்தில், காலை 10 முதல் மாலை 4 மணி வரையிலான வேலை நேரத்தை, மாநிலத்திலுள்ள பொதுத்துறை வங்கிகளில் கடைப்பிடிக்க ஒப்புதல் வழங்கியது. இந்த புதிய வேலை நேரமானது, அக்.1-ஆம் தேதி முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து பொதுத்துறை வங்கிகளிலும் அமலுக்கு வந்தது. மேலும் இந்த வேலை நேரத்தை கடைப்பிடிக்க தனியாா் வங்கிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here