இந்தியா உச்சநீதிமன்றத்தில் 35 சீனியர் தனிநபர் உதவியாளர் (Senior Personal Assistant ) மற்றும் 23 தனிநபர் உதவியாளர் ( Personal Assistant ) பணிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது.  இதற்கான,  விண்ணப்பம் ஆன்லைன் மூலம் ஏற்றுக்கொள்ளப்படும்.

பதிவு  செய்ய விரும்புகிறவர்கள்  செப்டம்பர் 28 முதல் அடுத்த மாதம் 24 ம்  தேதி வரை //jobapply.in/supremecourt2019paspa/ என்ற இணையத் தளத்திற்கு  சென்று விண்ணப்பிக்கலாம்.

தேவைப்படும் தகுதிகள்:

மூத்த தனிநபர் உதவியாளர் பணிக்கு:

1) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் பட்டம்.

2) 110 w.p.m. வேகத்துடன் சுருக்கெழுத்தில் (ஆங்கிலம்) தேர்ச்சி.

3) 40 w.p.m. தட்டச்சு வேகம் மற்றும்  கணினி செயல்பாட்டின் அறிவு.

4) அனுபவம்: – ஸ்டெனோகிராஃபர் கிரேடு-டி அல்லது ஸ்டெனோ டைப்பிஸ்டாக 2 வருடம் அனுபவம் இருத்தல் வேண்டும்

தனிப்பட்ட உதவியாளர் பணிக்கு

1) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் பட்டம்.

2) 100 w.p.m. வேகத்துடன் சுருக்கெழுத்தில் (ஆங்கிலம்) தேர்ச்சி.

3) 40 w.p.m. தட்டச்சு வேகம் மற்றும்  கணினி செயல்பாட்டின் அறிவு.

வயதுவரம்பு:

சீனியர் தனிநபர் உதவியாளர் பணிக்கு 32 வயதுக்குள் இருத்தல் வேண்டும் , தனிநபர் உதவியாளர் பணிக்கு 27 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

தனித்தனியாக விண்ணப்பித்தல் வேண்டும்:

சீனியர் தனிநபர் உதவியாளர்  மற்றும் தனிநபர் உதவியாளர் என இரண்டிலும் விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் தனித்தனியாக விண்ணப்பம் செய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தேர்வு தேதி

இந்த ஆட்சேர்ப்புக்கான எழுத்து தேர்வு, தட்டச்சு தேர்வுக்கான தேதியை இன்னும் சில நாட்களில்  www.sci.gov.in.  என்ற உச்சநீதிமன்ற வலைத் தளத்தில்  வெளியடப்படும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here