முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு மறு தேர்வு நடத்த தேவை இல்லை என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியுள்ளது.

கடந்த 27 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வு நடைபெற்றது. இதில் முன்பதிவு செய்த 1 லட்சத்து 85 ஆயிரத்து 466 பேரில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 580 பேர் மட்டுமே தேர்வை எழுதி உள்ளதாகவும் 37 ஆயிரத்து 886 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிட்டுள்ளது.

அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வர்களுக்கு 3 மணி நேரம் வழங்கப்பட்டு தேர்வுகள் நல்ல முறையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள ஆசிரியர் தேர்வு வாரியம், ஆவடி உள்ளிட்ட ஒரு சில தேர்வு மையங்களில் சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டாலும், அது உடனுக்குடன் சரி செய்யப்பட்டதாக விளக்கமளித்துள்ளது.

மேலும் அனைத்து இடங்களிலும் தேர்வுகள் சரியான முறையில் நடந்து இருப்பதால் மறுதேர்வு நடத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here