வரும், டிச., 26ல், ‘வளைய’ சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இது, தமிழகத்தில் நன்கு தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடுமலை, கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் கூறியதாவது:சூரியகிரகணத்தில், முழு, பகுதி மற்றும் வளையம் என, மூன்று வகைகள் உண்டு. வரும், டிச., 26ம் தேதி ‘வளைய’ சூரிய கிரகணம் நிகழ்கிறது. அப்போது, சூரியனுக்கும், பூமிக்கும் நடுவில், நிலவு வரும். நிலவு மறைப்பதால்,சூரியன், நெருப்பு வளையமாக காட்சியளிக்கும். அரிய நிகழ்வை, தமிழகத்தில், நீலகிரியில் துவங்கி, கோவை, திருப்பூர், ஈரோடு என, பல்வேறு மாவட்டங்களில் காண முடியும்.

இதையொட்டி, கோவை கே.பி.ஆர், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி வளாகத்தில், உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் இணைந்து, பயிற்சிப்பட்டறையை, வரும் 28ம் தேதி, காலை 9:00 மணி முதல், மாலை 4:30 வரை நடத்துகிறது; அறிவியலாளர்கள் பங்கேற்கின்றனர்.வானியல் குறித்த அறிவை மாணவர்கள், ஆசிரியர்கள் அறியும் வகையில், இது இருக்கும்; அனுமதி இலவசம். கிரகணத்தை வெறுங்கண்ணால் பார்க்க முடியாது. டெலஸ்கோப் மூலம் பார்க்கலாம். எளிய உபகரணங்கள் பயன்படுத்தி காண்பது குறித்தும், பயிற்சிப்பட்டறையில் தெரிவிக்கப்பட உள்ளது.இவ்வாறு, கூறினார்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here