தமிழகத்தில் விரைவில் வடகிழக்கு பருவமழையானது துவங்கவுள்ளது. இதனால் ஏற்படும் மின்விபத்துகளை தவிர்ப்பதற்கு மின்சார வாரியமானது ஆலோசனைகளை கூறியுள்ளது. மின்சார வாரியத்தின் சார்பாக கூறப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இனி காண்போம். 
மழை சமயத்தில் அறுந்த நிலையில் இருக்கும் மின்சார கம்பிகள் மற்றும் மின் கம்பங்களை தொட முயற்சிக்க வேண்டாம். மழை சமயத்தில்., இடி மற்றும் மின்னல்கள் ஏற்பட்டால் தொலைக்காட்சி., மாவட்டும் இயந்திரம் மற்றும் கணினி., அலைபேசி போன்ற மின்சாதனங்களை உபயோகம் செய்ய வேண்டாம். 
இல்லங்களின் கதவு மற்றும் ஜன்னல்கள் திறந்த நிலையில் இருந்தால் அதன் அருகில் நிற்க வேண்டாம். மேலும்., ஈரமான கைகளை கொண்டு மின்னிணைப்பு பொத்தான்களை இயக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
வீட்டின் அருகே இருக்கும் மின் கம்பங்கள் மற்றும் மின்கம்பத்தை தாங்கியிருக்கும் கம்பிகளில் கால்நடைகள் போன்றவற்றை கட்ட வேண்டாம் என்றும்., இதனுடன் கொடி போன்று இணைப்பு கொடுத்து துணைகளை காய வைக்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர். 
மழை சமயத்தில் மின் மாற்றிகள் மற்றும் மின் கம்பங்கள் மாறும் மின் பகிர்வு பெட்டிகளின் அருகே செல்ல வேண்டாம் என்றும்., குளிர்பதன பெட்டி மற்றும் மாவட்டும் இயந்திரம் போன்ற மின் சாதனங்களை நில இணைப்புடன் இணைக்க வேண்டும் என்றும்., இவ்வாறான இணைப்புகள் மூன்று மின் பொத்தான்கள் உள்ள இணைப்பின் மூலமாக இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 
கழிப்பறைகள் மற்றும் குளியலறைகளில் உள்ள பொத்தான்களை பொருத்துவதை தவிர்த்தல் மற்றும் மழையின் போது இடி – மின்னல் ஏற்பட்டால் மின் கம்பிகள் மற்றும் மரங்கள்., உலோக வேலிகள் மற்றும் பொருட்கள் இருக்கும் இடங்களில் இருக்க வேண்டாம் என்றும்., மின்சாரத்தால் தீவிபத்து ஏற்பட்டால் நீரினை கொண்டு தீயை அணைக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அலைபேசி வைத்திருக்கும் மற்றும் அலைபேசியில் பேசும் நபர்கள் உயர் அழுத்த மின் கோபுரங்களுக்கு கீழேயோ அல்லது அருகிலோ நின்று அலைபேசியில் பேச வேண்டாம் என்றும்., மழைக்கால மின் புகார்களை தெரிவிக்க 0452-1912 மற்றும் 0452- 2560601 குறிப்பிடப்பட்டுள்ள அலைபேசி எங்களுக்கு தெரிவிக்கலாம் என்றும்., வாட்சப் செயலியில் புகார்கள் பதிவு செய்ய 94431 11912 என்ற எண்ணில் புகார்கள் தெரிவிக்க வேண்டும் என்று மதுரை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் திரு.வெண்ணிலா அவர்கள் தெரிவித்துள்ளார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here