மனிதனுக்கு மிகவும் தேவையான ஓன்று சரியான அளவிலான தூக்கம். சரியான தூக்கம் இல்லையென்றால் உடலில் பல்வேறு விதமான வியாதிகள் ஏற்பட்ட வாய்ப்புகள் அதிகம். சிலர் படுத்ததும் உறங்கிவிடுவார்கள், சிலர் புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வருவதில்லை.

நமது உடலில் இருக்கும் தட்ப வெட்ப நிலையை பொறுத்துதான் நமது உடல் தூக்க நிலைக்கு செல்கிறது. பொதுவாக நல்ல குளுமையாக இருக்கும் பட்சத்தில் விரைவில் தூக்கம் வருகிறது. வெப்பம் அதிகமாக இருக்கும் நேரத்தில் தூங்க சிரமப்படுகிறோம்.

நமது கால் நுனி பகுதியானது முடிகள் இல்லாமல் மென்மையாக இருப்பதால் அந்த பகுதி விரைவில் குளுமையடைகிறது. இதனால் உடல் குளிர்ச்சி அடைந்து விரைவில் தூக்கம் வருகிறது. இதனால்தான் தூங்கும்போது கால் நுனிப்பகுதியை போர்வைக்கு வெளியே விடுமாறு கூறுகிறார்கள்.

இரவு உறங்கும் போது கால்களை போர்வைக்கு வெளியே இருக்கும் படி வைத்துக் கொள்வதால் வேகமாகவும், நிம்மதியாகவும் உறங்க முடியும் என பிரபல பத்திரிக்கையில் வெளியான ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல இரவு தூங்குவதற்கு முன்னர் குளித்துவிட்டு தூங்க சென்றாலும் நல்ல பலன் கிடைக்கும். தூங்கும் முன் குளிப்பதனால் உடலில் உள்ள வெட்பம் குறைந்து உடல் குளிர்ச்சி அடைகிறது. இதனால் நிம்மதியான தூக்கத்தை பெறமுடியும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here