இந்தியாவில் அரசியலமைப்பு சட்டம் எட்டாவது அட்டவணைப்படி, 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இது தவிர நுாற்றுக்கணக்கான மொழிகள் பேசப்படுகின்றன. நாட்டில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பேசும் தாய்மொழி 270ஆக இருந்தது. இதில் 123 தாய்மொழிகளை, ’22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின்’ கீழ் (பிரிவு – ஏ) சேர்க்கப்பட்டது. மற்ற 147 தாய்மொழிகளை, 99 மொழிகளாக (பிரிவு – பி) என வகைபடுத்தப்பட்டது.

2011 கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்கள் தொகை 121 கோடி. இதில், 96.71 சதவீதம் பேர் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் ஒன்றையும், 3.29 சதவீதம் பேர் மற்ற மொழிகளில் ஒன்றையும் பேசுகின்றனர். நாட்டில் அதிகபட்சமாக 52.83 கோடி பேர் (43.63 %) ஹிந்தியை தாய்மொழியாக பேசுகின்றனர். ஐந்தாவது இடத்தில் உள்ள தமிழை 6.90 கோடி பேர் (5.70%) பேசுகின்றனர். அங்கீகரிக்கப்படாத மொழிகளில், அதிகபட்சமாக’பில்லி’ மொழியை 1.04 கோடி பேர் பேசுகின்றனர். இது குஜராத், ம.பி., ராஜஸ்தான், மஹாராஷ்டிரா மாநிலங்களில் பேசப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here