புதிதாக, ஓராண்டு சிறப்பு படிப்பை முடித்தால் மட்டுமே, இனி, பொறியியல் கல்லுாரிகளில், பேராசிரியராக பணியாற்ற முடியும்,” என, ஏ.ஐ.சி.டி.இ., தலைவர், அனில் சஹஸ்ரபுதே தெரிவித்தார்.
மாற்றம்

பொறியியல் கல்லுாரி களில், பேராசிரியராக பணியாற்ற, முதுநிலை பொறியியல் படிப்பை முடித்திருந்தால் போதுமானதாக இருந்தது. இந்த விதிமுறையில், தற்போது மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்து, சென்னையில் நேற்று, ஏ.ஐ.சி.டி.இ., என அழைக்கப்படும், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவர், அனில் சஹஸ்ரபுதே, நிருபர்களிடம் கூறியதாவது:முதுநிலை பொறியியல் பட்டம் பெற்றிருந்தாலும், ஏ.ஐ.சி.டி.இ., வழங்கும், ஓராண்டு சிறப்பு படிப்பை முடித்து, தேர்ச்சி பெற்றால் மட்டுமே, பொறியியல் கல்லுாரிகளில், இனி பேராசிரியராக பணியாற்ற முடியும். ஏற்கனவே, பொறியியல் கல்லுாரிகளில், பேராசிரியராக பணியாற்றி வருவோரும், அந்த படிப்பை முடித்து, தேர்ச்சி பெற வேண்டும்.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லுாரிகள், தொழில்நுட்ப நிறுவனங்கள் என, அனைத்து வகை பேராசிரியர்களுக்கும், இந்த விதி பொருந்தும்.
அறிமுகம்
பொறியியல் படிப்பின் தரத்தை உயர்த்தவும், மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கவும், புதுமையான முறையில் கற்பிக்கவும், புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.பொறியியல் கல்வியில், புதுமையான பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்தும் முயற்சியாக, 2020 – 2021ம் கல்வியாண்டு முதல், பி.டெக்., படிப்பில், ‘ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்’ எனப்படும், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் பிரிவுகள் உருவாக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here