நாம் சில சமயம் உணவகங்களுக்கு சென்று தந்தூரி சிக்கனுடன் நாணை சாப்பிடுவதும்., உணவத்தில் இருக்கும் உணவுகளை அதிகளவு சாப்பிட்டு விட்டு., அதிகமாக சாப்பிட்டுவிட்டோமோ? என்று நினைப்பதும் வழக்கமான ஒன்றுதான். நாம் சாப்பிடும் உணவுகளின் கலோரி முறைகள் குறித்து அறியாதே இதற்கு காரணமாகும். பொதுவாக தந்தூரி சிக்கன் மற்றும் தந்தூரி வகை உணவுகளின் மூலமாக உடல் எடையை அதிகளவு கூட்ட இயலும். கடைகளில் இருக்கும் வறுத்த மற்றும் பொறித்த உணவுகளை காட்டிலும் தந்தூரியில் இருக்கும் கலோரியின் அளவு குறைவுதான்.

பொறித்த உணவுகளை அதிகளவு சாப்பிடும் பட்சத்தில் உடலின் எடை அதிகரிப்பதோடு., உடலில் கொழுப்பு மற்றும் இரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. தந்தூரி சிக்கன் மற்றும் மீன்., பன்னீர் போன்ற உணவுகளில் அதிகளவு புரோட்டீன் சத்துக்கள் இருப்பதால்., உடலுக்கு ஆரோக்கியமும் அதிகரிக்கிறது. இயன்றளவு வீட்டில் செய்யும் ருசியான உணவுகளே சாலச்சிறந்தது. கடைகளில் விற்பனை செய்யப்படும் மலாய் சிக்கன் டிக்கா வகைகளை தவிர்த்து., எப்போதும் போல செய்யப்படும் சிக்கன் டிக்கா வகைகளை செய்து சாப்பிடலாம்.

தந்தூரியில் சாட் மசாலா வகைகளை சேர்த்து சாப்பிட சிலருக்கு பிடிக்கும். சிலருக்கு பட்டரை சேர்த்து சாப்பிட இயலும். உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்கள் இதனை தவிர்ப்பது நல்லது. புரோட்டீன் வகை உணவுகளை எடுத்துக்கொள்ள விரும்பும் நபர்கள் சிக்கன் மற்றும் மீன் வகை உணவுகளை தந்தூரியாக செய்து சாப்பிடலாம். சிவப்பு நிறத்தில் இருக்கும் இறைச்சியில் அதிகளவு புரோட்டீன் சத்துக்களானது நிறைந்திருக்கும். மேலும்., வெஜிடேரியன் பன்னீரையும் சாப்பிடலாம். நாண் என்பது பொதுவாக பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். இது சுத்திகரிக்கப்பட்ட மாவால் செய்யப்படும் உணவாகும்.

நாணில் நார்சத்து மற்றும் கார்போஹைடிரேட் சத்துக்கள் உள்ளது. இது ஆரோக்கியத்திற்கு நல்ல உணவாகும். மேலும்., தந்தூரி வகை உணவுகளை சாப்பிடும் போது தானிய சப்பாத்தியுடன் சாப்பிட்டால் உடல் நலம்பெறும். சப்பாத்தியோடு காய்கறிகளை வைத்து சாப்பிடும் சமயத்தில்., உணவும் சமசீராவதோடு உடலும் நல்ல ஆரோக்கியம் பெரும்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here