போஷன் அபியான்* –

 *ஊட்டச்சத்து உறுதிமொழி*

1)  இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தாய் மற்றும் குழந்தையும் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத ஆரோக்கியமான உடல் நிலையை அடைய நான் என்று உறுதிமொழி ஏற்கிறேன் ,

2) தேசிய ஊட்டச்சத்து மாதத்தில் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் சம்பந்தமான கருத்துக்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று சேர்வதை நான் உறுதி செய்வேன்,

 3 ) ஆரோக்கியம் என்பது சரிவிகித சத்தான உணவு,   தூய்மையான குடிநீர்,
 சுகாதாரம்,
 சரியான தாய்மை,
 பச்சிளம் மற்றும் சிறு குழந்தைகளுக்கான உணவு ஊட்டும் பழக்கவழக்கங்களில் உள்ளது,

 4) தேசிய ஊட்டச்சத்து இயக்கமானது நாடு முழுவதும் ஒரு மக்கள் இயக்கமாக மாற,

 ஒவ்வொரு வீடு,
 ஒவ்வொரு பள்ளி,
 ஒவ்வொரு கிராமம்,
 ஒவ்வொரு நகரமும் ஊட்டச்சத்துள்ள உணவு மற்றும் நலவாழ்வு சம்பந்தமான கருத்துக்களை அறிய நான் உதவுவேன்,

 5 ) இந்த மக்கள் பேரியக்கத்தின் மூலம்   எனது நாட்டிலுள்ள எனது சகோதரிகள்,  சகோதரர்கள் மற்றும் குழந்தைகள் சிறந்த ஆரோக்கியமானவர்களாகவும்,  திறமையானவர்களாகவும் உருவெடுப்பர்.

இது என் உறுதிமொழி.

*”ஆரோக்கியமான மக்களால் ஆனது வலிமையான தேசமாகும்”*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here