சந்திராயன் 2 நள்ளிரவில் என்ன நடந்தது
 
 
 
 
சந்திராயன்-2 விண்கலனை இஸ்ரோ கடந்த ஜூலை 22ம் தேதி , ஜிஎஸ்எல்வி ராக்கெட்டில் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய 3 கலன்களுடன் செலுத்தியது.
சந்திராயன்-2ல் இருந்து பிரிந்த ஆர்பிட்டர் சாட்டிலைட் கருவி, நிலவின் சுற்றுவட்ட பாதையில், தனது பயனத்தை துவங்கிவிட்டது.
ரோவருடன் தரையிறக்க உதவும் விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறங்கவில்லை. நிலவின் இருந்து 2.1 கி.மீ முன் அதன் இஸ்ரோ மையத்துடனான தொடர்பை முற்றிலும் இழந்துள்ளது.
ஆர்பிட்டர் மட்டும் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கின்றது.
இது நிலவை தொடர்ந்து ஓராண்டுக்கு ஆய்வு செய்யும். மேலும், தென்துருவத்தில் சுற்றுவட்ட பாதையில் ஆர்பிட்டர் சுற்றிவருகின்றது. இது நிலவை ஆய்வு செய்து வருகின்றது.
சந்திரயான்- 2ன் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் தொடர்ந்து செயல்பட்டு நிலவை ஆய்வு செய்யும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆர்பிட்டர் 95% பணி செய்யும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
லேண்டர் நிலவில் தரையிறங்கினாலும் கூட 14 நாட்கள் மட்டும் ஆய்வு செய்து இருக்கும். இந்த திட்டம் முழு தோல்வி என கூற முடியாது என்று இஸ்ரோ விளக்கம் அளித்துள்ளது.
நிலவின் பரப்பிலிருந்து 2.1 கிமீ வரை விக்ரம் லேண்டர் எதிர்பார்த்ததைபோலவே லேண்டர் பயணித்திருக்கிறது. . அதன்பின் விக்ரம் ‘லேண்டர்’ உடன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. 
துண்டிக்கப்பட்டதற்கான காரணங்கள் மற்றும் தகவல்களை ஆராயவுள்ளோம். தொடர்ந்து ஆலோசனை நடந்து வருகிறது என்றார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here