அரசு பள்ளி மாணவர்களுக்கு, ‘நீட்’ நுழைவு தேர்வுக்கு, இரண்டு மணி நேரம் மட்டுமே பயிற்சி வழங்கப்பட்டது.தமிழக அரசின் சார்பில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, நீட் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள், இந்த பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளாக, பயிற்சி அளிக்கப்படுகிறது.எனினும், அரசின் உதவியால் பயிற்சி பெற்ற மாணவர்கள், மருத்துவப் படிப்பில் சேரும் அளவுக்கு, நீட் தேர்வில், அதிக மதிப்பெண் பெற முடியவில்லை.எனவே, அரசு வழங்கும் இலவச பயிற்சியை, இன்னும் அதிக தரத்துடன் வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இந்த ஆண்டு, நீட் தேர்வு பயிற்சி பெறும் மாணவர்கள், பள்ளி கல்வித்துறையின் தகுதி தேர்வு வழியாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். காலாண்டு தேர்வுக்கு பின், அவர்களுக்கு பயிற்சி துவங்கும் என, கூறப்பட்டது.இந்நிலையில், சிறுபான்மை அல்லாத மற்ற பிரிவு மாணவர்களுக்கு, ஆரம்ப பயிற்சி வகுப்பு நேற்று துவங்கியது. சென்னை, எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள பள்ளியிலும், மாவட்டத்தின் மற்ற இடங்களிலும், பயிற்சி வகுப்பு துவங்கின. காலை, 10:00 மணிக்கு துவங்கிய வகுப்புகள், பகல், 12:00 மணிக்குள் முடிந்து விட்டன.இந்த பயிற்சியில், சில ஆலோசனைகள் மட்டுமே வழங்கப்பட்டன. ‘ஆன்லைனில்’ பயிற்சி அளிக்கப்படும் என கூறி, வகுப்பு முடிக்கப்பட்டது.ராஜஸ்தான் மாநிலம், கோடா நகரை சேர்ந்த, ஆன்லைன் பயிற்சி நிறுவனத்திடம், இந்த பணி ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here