நேற்று பல்லடம் ஒன்றியத்தில் நடைபெற்ற குழு ஆய்வின் நடைமுறைகள்: ஆய்வுக் குழு (மேல்நிலைப் பள்ளிக்கு ஒரு DEO, BEO, BRT என மூவர் – நடுநிலை பள்ளிக்கு ஒரு BEO, BRT என இருவர் – தொடக்கப்பள்ளிக்கு ஒரு ஒரு BRT மட்டும்) காலை 9 மணிக்கு பள்ளிக்கு வந்தனர். காலை வழிபாட்டு கூட்டத்தில் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியர் MOBILE APPல் வருகைப் பதிவினை மேற்கொண்டனர். பிறகு 4 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு பாடங்களில் மதிப்பீடு தேர்வு நடத்தினர். தமிழ், ஆங்கிலம் வாசிப்பு பயிற்சி சோதித்தனர். பின்னர், SABL முறையில் ஆசிரியர் பாடம் நடத்தச் சொல்லி கற்பித்தல் திறன் சோதித்து மதிப்பெண்கள் பதிவு செய்யப்பட்டது. 1 TO 8 வகுப்புகளுக்கு பாடக் குறிப்பு பார்வையிடப்பட்டது. FA(a) FA(b) பதிவேடு மற்றும் செயல்பாடுகள் தொகுப்பு பார்வையிட்டனர். இணைப்பில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்த பின்னர் மாலை 4 மணிக்கு பல்லடம் கண்ணம்மாள் மெட்ரிக் பள்ளியில் திருப்பூர் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் தலைமையில் மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது. மிகவும் குறைவான மதிப்பீட்டை பெற்ற தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு குறையினை களைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டது. இவ்வாய்வின் அறிக்கை மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிக்கு அனுப்பப்படும் என அறியப்படுகிறது.

உங்கள் தகவலுக்காக

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here