ஒரு சிலருக்கே பித்த உபரி காரணமாக காலை வேளையில் கிறுகிறுப்பு உண்டாகும். இதை ஆரம்பத்திலேயே குணப்படுத்திக் கொள்வது நல்லது. இதைக் குணப்படுத்த சீரகம் நன்கு பயன்படுகிறது.

     15 கிராம் சீரகத்தைச் சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு, 8 கிராம் இந்துப்பைப் பொடித்து அதில் போட்டு சீரகம் மூழ்கும் அளவிற்கு எலுமிச்சம் பழச்சாறு விட்டு ஒருநாள் வைத்திருந்து மறு நாள் எடுத்து, 3 கிராம் மிளகு, கைப்பிடியளவு வேப்பம்பூ இவைகளையும் சேர்த்து மைபோல் அரைத்து பட்டாணியளவு உருண்டைகளாக உருட்டி நிழலில் வைத்து ஒரு சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு அதிகாலை, மாலை வேளையில் 3 உருண்டைகளை வாயில் போட்டு வெந்நீர் குடித்து வர சகல பித்த கிறுகிறுப்பும் மாறிவிடும்.

இந்த மருந்தை தொடர்ந்து 16 நாட்கள் சாப்பிட்டால் பித்தம் முழுவதும் நீங்கிவிடும். இந்த மருந்து சாப்பிடும் பொழுது பித்தம் உண்டாக்கும் பதார்த்தங்களை தவிர்க்கவும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here