காலையில் எழுந்தவுடன் அந்த நாளை சுறுசுறுப்புடன் நடத்துவதற்கு தேநீரை அருந்துகிறோம். இந்த சுவையை அறிந்த விரும்பிகள் நினைத்த நேரம் எல்லாம் ஆனந்தமாக தேநீர் கடைகளுக்கு சென்று தேநீரை அருந்தி வருகின்றனர். இந்த தேநீரை அதிகளவில் அருந்தும் பட்சத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து., சிலர் அறிந்தும் பழக்கத்தை விடவில்லை என்றும்., பலர் அறியாமலும் அருந்தி வருகின்றனர்.

தேநீரை அருந்தும் போது அதில் கிராம்பு., துளை இலைகள்., இஞ்சி மற்றும் தேயிலை கலந்த தேயிலை தூள்கள் கலக்கப்பட்ட தேறுநீரை அருந்துவது மற்றும் தேநீர் கலவையில் தேனை சேர்த்து பருவத்து நல்லது. பாரம்பரிய சுவையின் மூலமாக உருவாக்கப்பட்ட தேநீரை தயாரிப்பது நல்லது.

தேநீரை அருந்துவதன் மூலமாக செரிமான மண்டலமானது சிறப்பாக செயல்பட்டு சளி., இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் விலக உதவுகிறது. அதிக பதட்டத்துடன் இருக்கும் போது., பதட்டமானது தணிக்கிறது. இதன் காரணமாக வளர்ச்சிதை மாற்றம் அதிகரிக்கிறது. மேலும்., இரத்த அழுத்தம்., நீரிழிவு நோய் மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகள் கட்டுப்படுத்தப்படுகிறது.

தேநீரில் இத்தனை நன்மைகள் இருந்தாலும்., உணவு அருந்திய பின்னர் தேநீரை பலர் அருந்தும் பழக்கம் வைத்துள்ளனர். இதனால் பல பாதிப்புகள் ஏற்படுவதாக தகவலை வெளியாகியுள்ளது. அந்த வகையில்., மருத்துவர்களிடம் ஆலோசனை செய்யும் பட்சத்தில் இந்த பழக்கமானது தீய பழக்கம் என்று தெரிவிக்கின்றனர்.

உணவு அருந்திய பின்னர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவோ அல்லது பின்னரோ தேநீரை பருகினால் செரிமான மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தி., குடல் பகுதியின் செயல்பாடுகளுக்கு தடை விதித்து., நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சனையையும்., நெஞ்சு வீக்கத்தையும் ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக பெருங்குடல் மற்றும் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் பாதிக்கிறது என்று தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here