பள்ளிகளில் பயிலும் எஸ்.சி. எஸ்.டி  மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் உயர்வை சிபிஎஸ்இ திரும்ப பெற்றது. சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான கட்டணத்தை நேற்று முன்தினம் அதிரடியாக உயர்த்தி இருந்தது. அதில் எஸ்.சி., எஸ்.டி.  மாணவர்களுக்கு 24 மடங்கு கட்டணத்தை உயர்த்தி சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவித்தது. அதேபோல், பொதுப்பிரிவு மாணவர்களுக்கான தேர்வு கட்டணத்தை 2 மடங்கும் உயர்த்தி இருந்தது. இந்நிலையில் பல்வேறு கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சிபிஎஸ்இ தேர்வு கட்டண உயர்வை  திரும்பப்பெற்றது. தேர்வு கட்டண உயர்வு தொகை டெல்லி அரசிடம் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here