சுதந்திர தினத்தன்று, சென்னை, கோட்டையில் பறக்க விடுவதற்காக, ஐ.எஸ்.ஐ., சான்று பெற்ற, பிரமாண்டமான தேசியக் கொடி, மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து, சென்னை காதி கிராமோத்யோக் பவனுக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. 

மிகவும் உயரமானதுசுதந்திர தினத்தன்று, சென்னை, கோட்டை கொத்தளத்தில், முதல்வர் தேசியக் கொடியேற்றுவது வழக்கம். கோட்டையில் உள்ள கொடிக்கம்பம், இந்தியாவில் உள்ள கொடி கம்பங்களில், மிகவும் உயரமானது.சுதந்திர தினத்தன்று, கோட்டை கொடிக் கம்பத்தில் பறக்க விடுவதற்காக, மஹாராஷ்டிராவில் தயாரிக்கப்பட்ட, ஐ.எஸ்.ஐ., சான்று பெற்ற தேசியக் கொடி, சென்னை காதி கிராமோத்யோக் பவனுக்கு வந்துள்ளது. 

விற்பனை இது குறித்து, காதி கிராமோத்யோக் பவன் மேலாளர், செல்வராஜ் கூறியதாவது: மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில், காதியில் தயாரிக்கப்பட்ட, ஐ.எஸ்.ஐ., சான்று பெற்ற, தேசியக் கொடிகளையே ஏற்ற வேண்டும். தேசியக் கொடிகள், மஹாராஷ்டிரா மாநிலம், நான்டெக், மரத்துவாடாவில், மத்திய அரசின் காதி நிறுவனம் சார்பில் தயாரிக்கப் படுகின்றன.தேசியக் கொடி, நான்கு இழைகளால் தயாரிக்கப்படுகிறது. இதனால், மழை மற்றும் வெயிலில் கிழியாது. 

சென்னையில் உள்ள, காதி கிராமோத்யோக் பவனில், ஐ.எஸ்.ஐ., சான்று பெற்ற, தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்படுகின்றன.கோட்டையில் ஏற்றப்படும் தேசியக் கொடி முதல், அனைத்து மத்திய, மாநில அரசு அலுவலகங்களும், நிறுவனங்களும் காதி நிறுவனத்தில், துறை வாரியாக கடிதம் கொடுத்து, தேசியக் கொடியை வாங்கி செல்வர். பொதுமக்களுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.தேசியக் கொடி -விலை எவ்வளவு?தேசியக் கொடி, 8×12 அடி அளவு, 6,663 ரூபாய்; 6×9 அடி அளவு, 4,482 ரூபாய்; 4×6 அடி அளவு, 1,701 ரூபாய்; 3×4.5 அடி அளவு, 1,215 ரூபாய்; 2×3 அடி அளவு, 616 ரூபாய். 

இந்த அளவுகளில் தான் கொடி தயாரிக்கப்படுகிறது.முதல்வர், கவர்னர், அரசின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களின் கார்களுக்கான தேசியக் கொடி, 6×9 இன்ச் அளவில் தயாரிக்கப்படுகிறது. அதன் விலை, 92 ரூபாய்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here